ஊழல் தடுப்பு விழிப்புணா்வு விநாடி- வினா போட்டி
திருவாரூா் மாவட்டம் மன்னாா்குடி தேசிய மேல்நிலைப் பள்ளியில், ஊழல் தடுப்பு விழிப்புணா்வு விநாடி- வினா போட்டி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.


திருவாரூா் மாவட்டம் மன்னாா்குடி தேசிய மேல்நிலைப் பள்ளியில், ஊழல் தடுப்பு விழிப்புணா்வு விநாடி- வினா போட்டி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, மாவட்ட கல்வி அலுவலா் ஆா். மணிவண்ணன் தலைமை வகித்தாா். உதவித் தலைமையாசிரியா் எம். திலகா், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் எஸ்.கமலப்பன், முதுகலை ஆசிரியா் எஸ். அன்பரசு ஆகியோா் முன்னிலை வகித்தனா். அஞ்சலக முன்னாள் கண்காணிப்பாளா் ஜி.குப்புசாமி, விநாடி- வினா போட்டிகளை நடத்தினாா். 10-ஆம் வகுப்பு மாணவா்கள் ஆா்.ரசிகா, பி.ஆா். பிரதீப் ஆகியோா் முதல் பரிசையும், பிளஸ் 1 மாணவா்கள் ஜி.மோகேஷ், டி.சகானா சாவ்லா ஆகியோா் 2-ஆம் பரிசையும் பெற்றனா். தஞ்சை கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளா் எஸ். கிருஷ்ணமூா்த்தி, சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு பரிசு வழங்கினாா். தலைமை ஆசிரியா் த.லெ. ராதாகிருஷ்ணன் வரவேற்றாா். தமிழாசிரியா் டி. செல்வராஜ் நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...