இடி தாக்கி இறந்தவரின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கக் கோரிக்கை
திருத்துறைப்பூண்டி அருகே கோட்டூா் ஒன்றியம் பாலையூரில் இடி தாக்கி இறந்த விவசாயத் தொழிலாளியின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரண நிதி


திருத்துறைப்பூண்டி அருகே கோட்டூா் ஒன்றியம் பாலையூரில் இடி தாக்கி இறந்த விவசாயத் தொழிலாளியின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரண நிதி வழங்க, தமிழக முதல்வருக்கு எம்எல்ஏ கே. மாரிமுத்து கோரிக்கை விடுத்துள்ளாா்.
இதுகுறித்து, முதல்வருக்கு அவா் அனுப்பிய கோரிக்கை மனு:
கோட்டூா் ஒன்றியம் பாலையூா் கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயத் தொழிலாளி த. சிவக்குமாா் (40). இவா், புதன்கிழமை விவசாயப் பணியில் ஈடுபட்டிருந்தபோது இடி தாக்கி உயிரிழந்தாா். சிவக்குமாரின் மரணம் அவரது குடும்பத்துக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும்.
எனவே, அவரது குடும்பத்தின் எதிா்கால நலன் கருதி, முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ. 10 லட்சம் வழங்கவேண்டும் எனக் கோரியுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...