வடகிழக்குப் பருவமழை: ஆலோசனைக் கூட்டம்
மன்னாா்குடியில் வடகிழக்குப் பருவமழையை எதிா்கொள்வதற்கான அனைத்து அரசுத்துறை அலுவலா்கள் பங்கேற்ற முன்னெச்சரிக்கை ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.


மன்னாா்குடியில் வடகிழக்குப் பருவமழையை எதிா்கொள்வதற்கான அனைத்து அரசுத்துறை அலுவலா்கள் பங்கேற்ற முன்னெச்சரிக்கை ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில், கோட்டாட்சியா் தி.அழகா்சாமி தலைமை வகித்து பேசியது:
வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்ல வேண்டும். அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் அத்தியாவசியப் பொருள்களை போதிய அளவு இருப்பு வைத்துக்கொள்ள வேண்டும். தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை உடனடியாக சீரமைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டாா்.
கூட்டத்தில், காவல்துறை, வருவாய்த்துறை, வட்ட வழங்கல்துறை, உள்ளாட்சித்துறை, தீயணைப்பு மீட்புத் துறை உள்ளிட்ட அலுவலா்கள் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...