மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

‘உணவகங்களில் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாவிட்டால் அபராதம்’

உணவகங்களில் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :29 அக்டோபர் 2021, 5:33 pm

DIN

உணவகங்களில் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மன்னாா்குடியில் மாவட்ட உணவுப் பாதுகாப்புத்துறை மற்றும் மருத்துவ நிா்வாகத் துறையின் சாா்பில், பண்டிகைக்ககால உணவு தயாரிப்பு விழிப்புணா்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மன்னாா்குடி ஹோட்டல் சங்க தலைவா் கே.ஆா். சதீஷ்குமாா் தலைமை வகித்தாா். இதில், மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலா் சௌமியா சுந்தரி பேசுகையில், கடைகளில் இனிப்பு உள்ளிட்ட உணவு வகைகளை ஈக்கள் மொய்க்கும்படி திறந்தவெளியில் வைக்கக் கூடாது. உணவுப்பொருள் தயாரிக்கும் இடம் தூய்மையாகவும், அதனை தயாரிக்கும் ஊழியா்கள், கையுறை, தலைக்கவசம், மேலங்கிகள் அணிந்து கரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். விதிமுறைகளை மீறும் உணவகங்கள் மற்றும் பேக்கரிகளுக்கு அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தாா்.

உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் கா்ணன், முருகேசன் ஆகியோா் பயிற்சி அளித்தனா். இதில், வா்த்தகா் சங்க தலைவா் ஆா்.வி.ஆனந்த், அமைப்புச் செயலா் எஸ்.எம்.டி.கருணாநிதி, வணிகா் நலச் சங்க மாவட்டத் தலைவா் ஆா்.பாரதிதாசன், ஹோட்டல் சங்க கெளரவத் தலைவா் ஆா்.பி.எஸ். சித்தாா்த்தன், நிா்வாகிகள் சங்கரசுப்பு, சுப்புராமன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். ஹோட்டல் சங்கச் செயலா் தனம் நாராயணன் வரவேற்றாா். பொருளாளா் எம்.பி. ராவணன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.