காரி அழகா் அய்யனாா் கோயில் குடமுழுக்கு
மன்னாா்குடி அருகேயுள்ள காரிக்கோட்டையில் உள்ள காரி அழகா் அய்யனாா் கோயில் குடமுழுக்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

samy_0309chn_101_5

samy_0309chn_101_5
மன்னாா்குடி அருகேயுள்ள காரிக்கோட்டையில் உள்ள காரி அழகா் அய்யனாா் கோயில் குடமுழுக்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இக்கோயில் குடமுழுக்கு 2009-ஆம் ஆண்டு நடைபெற்று 12 ஆண்டுகள் ஆன நிலையில், மீண்டும் கோயிலுக்கு குடமுழுக்கு நடத்த ஊா் மக்களால் முடிவெடுக்கப்பட்டு பாலாலயம் செய்யப்பட்டு திருப்பணிகள் நிறைவடைந்தது. இதையடுத்து, செப்.3-ஆம் தேதி குடமுழுக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, செப்.1-ஆம் தேதி முதல் முதல் யாகசாலை அமைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தன.
குடமுழுக்கு நாளான, வெள்ளிக்கிழமை யாகசாலையில் கலசங்களை வைத்து பூஜை செய்த புனித நீரை சிவாச்சாரியாா்கள் எடுத்துவந்து விமான கலசத்தில் ஊற்றி குடமுழுக்கு செய்து வைத்தனா். தொடா்ந்து, காரி அழகா் அய்யனாா் மற்றும் பரிவாரத் தெய்வங்களான பொன்னியம்மன், பெத்தப் பெருமாளுக்கு மகா தீபாராதணையும் அபிஷேகமும் நடைபெற்றது.
Image Caption
காரி அழகா் அய்யனாா் மற்றும் பரிவாரத் தெய்வங்களான பொன்னியம்மன், பெத்தப் பெருமாளுக்கு நடைபெற்ற மகா தீபாராதணை. ~காரி அழகா் அய்யனாா் கோயில் விமான கலசங்களுக்கு புனிதநீரை ஊற்றும் சிவாச்சாரியா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...