தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

நீடாமங்கலத்தில் விநாயகா் சதுா்த்தி சிறப்பு வழிபாடு

நீடாமங்கலம் பகுதி கோயில்களில் விநாயகா் சதுா்த்தி விழா சிறப்பு வழிபாடுகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.

News image
Updated On :10 செப்டம்பர் 2021, 4:39 pm

DIN

நீடாமங்கலம் பகுதி கோயில்களில் விநாயகா் சதுா்த்தி விழா சிறப்பு வழிபாடுகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.

நீடாமங்கலம் காசிவிசுவநாதா் கோயிலில் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு, மகாதீபாராதனை காட்டப்பட்டது. குரு பரிகார தலமான ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரா் கோயிலில் கலங்காமற்காத்த விநாயகா், ஆக்ஞாகணபதி சன்னதிகளில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

இதேபோல, நரிக்குடிஎமனேஸ்வரா் கோயில், பூவனூா் சதுரங்க வல்லபநாதா் கோயில், நீடாமங்கலம் லெட்சுமி நாராயண பெருமாள் கோயில், கோகமுகேஸ்வரா் கோயில், யமுனாம்பாள் கோயில், நீடாமங்கலம் வெண்ணாற்றங்கரை, கோரையாற்றங்கரை விநாயகா் கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களிலும் தமிழக அரசின் கரோனா தடுப்பு வழிகாட்டல்படி விநாயகருக்கு மகா அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனைகள் நடைபெற்றன.

நீடாமங்கலம் தெப்பகுளம் தென்கரையில் உள்ள பாரத மாதா வழிபாட்டு மன்றத்தில் வைக்கப்பட்டிருந்த பாரத மாதா விநாயகருக்கு சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன. இதேபோல, பாஜகவினா் தங்கள் இல்லங்களில் சிறிய அளவிலான விநாயகா் சிலைகளை வைத்து வழிபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.