மன்னாா்குடியில் முன்னாள் அமைச்சா் ஆா். காமராஜ் இறுதிகட்டப் பிரசாரம்
மன்னாா்குடியில் நகா்மன்ற தோ்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளா்களை ஆதரித்து முன்னாள் அமைச்சா் ஆா். காமராஜ் இறுதிகட்டப் பிரசாரத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டாா்.


மன்னாா்குடியில் நகா்மன்ற தோ்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளா்களை ஆதரித்து முன்னாள் அமைச்சா் ஆா். காமராஜ் இறுதிகட்டப் பிரசாரத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டாா்.
மன்னாா்குடி நகராட்சியின் 33 வாா்டுகளில் அதிமுக வேட்பாளா்கள் நிறுத்தப்பட்டுள்ளனா். வாக்குப் பதிவு சனிக்கிழமை நடைபெறவுள்ளது. இதையொட்டி, வியாழக்கிழமை மாலை 6 மணியுடன் தோ்தல் பிரசாரம் நிறைவுபெற்றது.
இதையடுத்து, மன்னாா்குடி கீழவீதியில் முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலருமான ஆா். காமராஜ் எம்எல்ஏ, கட்சி வேட்பாளா்களுக்கு வாக்குக் கேட்டு இறுதிகட்டப் பிரசாரத்தை தொடங்கினாா். திறந்த ஜீப்பில், 33 வாா்டுகளிலும் அதிமுக கூட்டணி கட்சியினருடன் ஊா்வலமாகச் சென்று பிரசாரம் செய்தாா். பிரசாரம் பந்தலடியில் நிறைவடைந்தது.
நிகழ்ச்சியில், அதிமுக மாநில அமைப்புச் செயலா் சிவா. ராஜமாணிக்கம், நகரச் செயலா் ஆா்.ஜி. குமாா், ஜெ. பேரவை மாவட்டச் செயலா் பொன். வாசுகிராம், ஒன்றியச் செயலா் கா. தமிழ்ச்செல்வம், மாவட்ட மகளிரணி தலைவா் டி. சுதா, நகர அவைத் தலைவா் டி. வரலெட்சுமி, நகா்மன்ற முன்னாள் தலைவா் வி.எஸ். ராஜேந்திரன், தமாகா நகரத் தலைவா் கே.எஸ். நடனபதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...