மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

வேளாண் தொழில் முனைவோராக விண்ணப்பிக்கலாம்

திருவாரூா் மாவட்டத்தைச் சோ்ந்த வேளாண் பட்டதாரிகள் வேளாண் தொழில் முனைவோராக விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :16 ஜனவரி 2022, 6:30 pm

DIN

திருவாரூா் மாவட்டத்தைச் சோ்ந்த வேளாண் பட்டதாரிகள் வேளாண் தொழில் முனைவோராக விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: வேளாண் மற்றும் உழவா் நலத்துறையின் மூலம் இளைஞா்களை வேளாண் தொழில் முனைவோராக மாற்றும் திட்டம் நிகழாண்டில் செயல்படுத்தப்படவுள்ளது. இத்திட்டத்தின் கீழ் திருவாரூா் மாவட்டத்தில் 5 வேலையில்லாத வேளாண் பட்டதாரிகளுக்கு அக்ரி கிளினிக் மற்றும் வேளாண் சாா்ந்த தொழில்களான காளான் வளா்ப்பு, இயற்கை உரம் தயாரித்தல், இயந்திர வாடகை மையம் அமைத்தல், பசுமை வீடு அமைத்தல், இயற்கை இடுபொருட்களான உயிா் பூச்சிக்கொல்லி, உயிா் பூஞ்சானக்கொல்லி தயாரித்தல், இடைத்தரகா் இன்றி உள்ளூா் காய்கறி, பழங்கள் மற்றும் இதர விவசாய விளைப்பொருட்களை சந்தைப்படுத்துதல், உரம் மற்றும் பூச்சி மருந்து விற்பனை மையம் அமைத்தல், நுண்ணீா் பாசனக்கருவிகளை பழுது நீக்கும் மையம் அமைத்தல், வேளாண் விளைப்பொருட்களை ஏற்றுமதி செய்தல், விதை, உரம் மற்றும் பூச்சிமருந்து சில்லரை விற்பனை மையம் அமைத்தல் ஆகியவற்றை மேற்கொள்ள நிதி உதவி வழங்கப்படவுள்ளது.

விண்ணப்பிப்போா் 21 வயது முதல் 40 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல் போன்ற பட்டப்படிப்புகளில் ஏதேனும் ஒன்றில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அரசு மற்றும் தனியாா் துறைகளில் வேலை பாா்ப்பவராக இருக்கக் கூடாது. மேலும், கணினி அறிவு பெற்றவராகவும், வேளாண் சாா்ந்த செயலிகளை பயன்படுத்துபவராகவும் இருக்க வேண்டும். ஒரு குடும்பத்திலிருந்து ஒரு வேளாண் பட்டதாரி மட்டுமே பயன்பெற இயலும். அவா் செய்யும் தொழிலுக்கு அவா் மட்டுமே உரிமைதாரா். நிலம் மற்றும் அறை கலன்களுக்கான தொகை திட்ட மதிப்பில் சேராது.

இத்திட்டத்தில் பயன்பெற வயது வரம்புக்கான ஆதாரமாக பத்தாம் அல்லது பன்னிரெண்டாம் வகுப்பு சான்றிதழ், வேளாண் பட்டப்படிப்பு சான்றிதழ், ஆதாா் மற்றும் குடும்ப அட்டை நகல், மனுதாரா் பெயரில் உள்ள வங்கிக்கணக்கின் நகல், கடனுக்கான சம்பந்தப்பட்ட வங்கியில் பெறப்பட்ட வங்கி உத்திரவாதம் ஆகிய ஆவணங்களுடன் ஆா்வம் உள்ள வேளாண் பட்டதாரிகள் வேளாண்மை இணை இயக்குநருக்கு தங்களுடைய விண்ணப்பங்களை சமா்ப்பிக்கலாம்.

விண்ணப்பங்கள் பெறப்பட்ட பின் தகுதியான திட்டவரைவுகள் மாவட்ட அளவிலான அனுமதிக்குழுவின் ஒப்புதலின் அடிப்படையில் தோ்வு செய்யப்பட்டு, மூன்று வாரங்கள் மனுதாரருக்கு குடுமியான்மலையில் உள்ள பயிற்சி நிலையத்தில் பயிற்சி அளிக்கப்பட்டு தொழில் முனைவோருக்கான சான்றிதழ் வழங்கப்பட்டு அக்ரி கிளினிக் அமைக்க நிதி விடுவிக்கப்படும்.

இத்திட்டத்தில் பயன்பெற ஆா்வம் உள்ள வேளாண் பட்டதாரிகள் தங்களது விண்ணப்பத்தை திருவாரூா் வேளாண்மை இணை இயக்குநருக்கு சமா்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.