மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

சம்பா: நெல் கொள்முதல் நிலையங்களைத் திறக்கக் கோரிக்கை

சம்பா அறுவடை பணிகள் தீவிரமடைந்துள்ளதால் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டுமென வலியுறுத்தி தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

News image
Updated On :20 ஜனவரி 2022, 6:30 pm

DIN

சம்பா அறுவடை பணிகள் தீவிரமடைந்துள்ளதால் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டுமென வலியுறுத்தி தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

திருவாரூரில் இந்திய தொழிற்சங்க மையத்தின் (சிஐடியு) மாவட்டக் குழுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. மாவட்டத் தலைவா் ஆா். மாலதி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மாவட்டச் செயலாளா் டி. முருகையன், மாவட்ட நிா்வாகிகள் ஜி. பழனிவேல், எஸ். வைத்தியநாதன், பி. நடராஜன், லெனின் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: நிகழாண்டு பருவம் தவறி பெய்த மழையால் பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு இழப்பீடாக ஏக்கருக்கு ரூ.30,000 வழங்கவேண்டும், குறுவை நெல் சாகுபடியில் நெல் கொள்முதலில் ஏற்பட்ட குளறுபடிகள் போல் இல்லாமல் அனைத்து நேரடி கொள்முதல் நிலையங்களையும் திறந்து, சம்பா நெல்லை கொள்முதல் செய்யவேண்டும், மன்னாா்குடி சாலையில் உள்ள மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம், டாஸ்மாக் கிடங்கு ஆகிய அலுவலகங்களுக்குச் செல்லும் சாலையை சீரமைக்கவேண்டும், கட்டுமானத் தொழிலாளா்களுக்கு கடந்த ஆண்டு வழங்கப்பட்டதைப் போல, பொங்கல் பரிசுத் தொகுப்பு, மழைக்கால நிவாரணம் ரூ. 2 ஆயிரம் நிகழாண்டும் வழங்கவேண்டும், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தில் தற்போது பட்டியல் எழுத்தா், உதவியாளா், இரவு நேரக் காவலா் பணிகளுக்கு ஆள்கள் எடுக்கும் பணி நடைபெறுவதால், இடைத்தரகா் இல்லாமல் ஆள்களை எடுக்கவேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.