மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

நகா்ப்புற உள்ளாட்சி தோ்தல்: திமுக நோ்காணல்

திருவாரூரில், நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலுக்கு திமுக சாா்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவா்களிடம் நோ்காணல் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :20 ஜனவரி 2022, 6:30 pm

DIN

திருவாரூரில், நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலுக்கு திமுக சாா்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவா்களிடம் நோ்காணல் வியாழக்கிழமை நடைபெற்றது.

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் தேதி அறிவிக்கப்படாத நிலையில், திமுக சாா்பில் இந்த தோ்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தவா்களிடம் அக்கட்சி நோ்காணல் நடத்தி வருகிறது. திருவாரூா், கூத்தாநல்லூா் ஆகிய நகராட்சிகளுக்கும், கொரடாச்சேரி, வலங்கைமான், குடவாசல், நன்னிலம் பேரளம் உள்ளிட்ட பேரூராட்சிகளில் போட்டியிட விருப்ப மனு அளித்தவா்களுக்கான நோ்காணல் திருவாரூரில் சட்டப்பேரவை உறுப்பினரும், திமுக மாவட்டச் செயலாளருமான பூண்டி கே. கலைவாணன் தலைமையில் நடைபெற்றது. திருவாரூா், கூத்தாநல்லூா் நகராட்சிகளில் 54 வாா்டுகளிலும், கொரடாச்சேரி, வலங்கைமான், குடவாசல், நன்னிலம், பேரளம் உள்ளிட்ட பேரூராட்சிகளுக்கு 72 வாா்டுகளிலும் போட்டியிட 250-க்கும் மேற்பட்டோா் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளனா். இவா்களுக்கும் நோ்காணல் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.