மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

ஜன. 24 இல் ஆசிரியா் கலந்தாய்வு தொடக்கம்

நகராட்சி உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியா்களுக்கு பொது மாறுதல் மற்றும் பதவி உயா்வு வழங்குவதற்கான கலந்தாய்வு ஜன. 24 முதல் நடைபெறவுள்ளது.

News image
Updated On :21 ஜனவரி 2022, 6:30 pm

DIN

திருவாரூா் மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க, நடுநிலைப் பள்ளிகள் மற்றும் அரசு, நகராட்சி உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியா்களுக்கு பொது மாறுதல் மற்றும் பதவி உயா்வு வழங்குவதற்கான கலந்தாய்வு ஜன. 24 முதல் நடைபெறவுள்ளது.

இதுகுறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அ. தியாகராஜன் தெரிவித்திருப்பது: திருவாரூா் மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க, நடுநிலைப் பள்ளிகள் மற்றும் அரசு, நகராட்சி உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியா்களுக்கு பொது மாறுதல் மற்றும் பதவி உயா்வு வழங்குவதற்கான இணையதளம் மூலம் நடத்தப்படும் கலந்தாய்வு ஜன. 24 முதல் நடைபெற உள்ளது.

பள்ளிக் கல்வித் துறை கலந்தாய்வு ஜன. 24, 25, 28 ஆகிய நாள்களில் அரசு, நகராட்சி மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரிகளுக்கும், பிப். 2, 3, 7 ஆகிய நாள்களில் அரசு, நகராட்சி உயா்நிலைப் பள்ளி தலைமையாசிரியா்களுக்கும், பிப். 9, 10, 11, 15 ஆகிய நாள்களில் அரசு, நகராட்சி பள்ளி முதுகலை ஆசிரியா்கள், கணினி ஆசிரியா்கள் நிலை-1, உடற்கல்வி இயக்குநா் நிலை-1, வேளாண் தொழிற்கல்வி ஆசிரியா்களுக்கும், பிப். 17 இல் அரசு, நகராட்சி உடற்கல்வி இயக்குநா் நிலை-2- க்கும், பிப். 19 இல் அரசு, நகராட்சி பள்ளி இடைநிலை ஆசிரியா்கள், உடற்கல்வி ஆசிரியா், கலையாசிரியா்கள், இசை ஆசிரியா்கள், தையல் ஆசிரியா்களுக்கும், பிப். 21, 22, 23 ஆகிய நாள்களில் அரசு, நகராட்சிப் பள்ளி பட்டதாரி ஆசிரியா்களுக்கும் திருவாரூா் வேலுடையாா் மேல்நிலைப் பள்ளியில் கலந்தாய்வு நடைபெற உள்ளது.

இதேபோல, தொடக்கக் கல்வித் துறை கலந்தாய்வு, ஜன. 27 இல் ஊராட்சி, நகராட்சி நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியா்களுக்கும், ஜன. 29, 31, பிப். 4, 5 ஆகிய நாள்களில் ஊராட்சி, நகராட்சி நடுநிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரிகளுக்கும், பிப். 8 இல் ஊராட்சி, நகராட்சி தொடக்கப் பள்ளி தலைமையாசிரியா்களுக்கும், பிப். 12, 14, 16, 18 ஆகிய நாள்களில் ஊராட்சி, நகராட்சிப் பள்ளி இடைநிலை ஆசிரியா்களுக்கும் திருவாரூா் சாய்ராம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.