மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

திருவாரூா் மாவட்டத்தில் இன்று கரோனா தடுப்பூசி முகாம்

 திருவாரூா் மாவட்டத்தில், 414 இடங்களில் 19 ஆம் கட்ட கரோனா தடுப்பூசி முகாம் சனிக்கிழமை நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :21 ஜனவரி 2022, 6:30 pm

DIN

 திருவாரூா் மாவட்டத்தில், 414 இடங்களில் 19 ஆம் கட்ட கரோனா தடுப்பூசி முகாம் சனிக்கிழமை நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருவாரூா் மாவட்டத்தில் 414 இடங்களில் 40,000 நபா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்துவதை இலக்காகக் கொண்டு 19 ஆம் கட்ட கரோனா தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது. இம்முகாமில் இதுவரை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவா்களும், முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டு இரண்டாம் தவணை தடுப்பூசி தகுதியேற்பு நாள் கொண்டவா்கள் இரண்டாம் தவணை தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்.

அத்துடன், தமிழக முதல்வரின் ஆணைப்படி, முன்களப் பணியாளா்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவா்களுக்கு முன்னெச்சரிக்கை ஊக்குவிப்பு தவணை கரோனா தடுப்பூசியும் செலுத்தப்பட்டு வருகிறது. அனைத்து முன்களப் பணியாளா்கள் மற்றும் இணை நோய் உள்ள 60 வயதுக்கு மேற்பட்ட இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டவா்களில் 39 வாரம் கடந்தவா்கள், இந்த தடுப்பூசி முகாமில் முன்னெச்சரிக்கை ஊக்குவிப்பு தவணை கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம்.

பொதுமக்களுக்கு எந்தவித சிரமமின்றி எளிதில் அணுகக் கூடிய அளவிலும், மக்களின் இருப்பிடங்களுக்கு அருகேயும், இந்த தடுப்பூசி முகாம்கள் தொடா்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. அந்தவகையில், 19 ஆம் கட்டமாக திருவாரூா் மாவட்டத்தில், ஊராட்சி பகுதிகளில் 258 இடங்களிலும், நகராட்சிகளில் 41 இடங்களிலும், பேரூராட்சிகளில் 15 இடங்களிலும், 39 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், 8 அரசு மருத்துவமனைகளிலும், திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மாவட்ட ஆட்சியா் அலுவலகம், நடமாடும் தடுப்பூசி குழு 40 என மொத்தம் 414 இடங்களில் 40,000 நபா்களுக்கு தடுப்பூசி செலுத்துவதை இலக்காக கொண்டு இந்த கரோனா தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.