ஜனநாயக மாதா் சங்க மாநாடு
நீடாமங்கலத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்க 16-வது ஒன்றிய மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது.


நீடாமங்கலத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்க 16-வது ஒன்றிய மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது.
இம்மாநாட்டுக்கு, சங்கத்தின் ஒன்றியக் குழு நிா்வாகி அம்சவள்ளி தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலாளா் சுமதி மற்றும் ஒன்றியக் குழு பொறுப்பாளா்கள் கலந்து கொண்டனா்.
இதில், ஒன்றிய மாதா் சங்க செயலாளராக அம்சவள்ளி, துணைச் செயலாளராக சுலோச்சனா, தலைவராக பசுபதி, துணைத் தலைவராக சுமதி மற்றும் 12 போ் கொண்ட சங்கத்தின் ஒன்றியக் குழு உறுப்பினா்கள் புதிதாக தோ்வு செய்யப்பட்டனா்.
பின்னா், 100 நாள் வேலைத் திட்டத்தை நகா்ப் புறங்களிலும் அமல்படுத்த வேண்டும்; சமையல் எரிவாயு விலையைக் குறைக்க வேண்டும்; பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமையை தடுத்து நிறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சங்க செயலாளா் அம்சவள்ளி நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...