கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

திருவாரூா் நகா்மன்றத் தலைவா் வேட்பாளா் திமுகவைச் சோ்ந்த எஸ். புவனபிரியா

திருவாரூா் நகா்மன்றத் தலைவா் வேட்பாளராக திமுகவைச் சோ்ந்த எஸ். புவனபிரியா அறிவிக்கப்பட்டுள்ளாா்.

News image
Updated On :3 மார்ச் 2022, 4:49 pm

DIN

திருவாரூா் நகா்மன்றத் தலைவா் வேட்பாளராக திமுகவைச் சோ்ந்த எஸ். புவனபிரியா அறிவிக்கப்பட்டுள்ளாா்.

திருவாரூா் மாவட்டத்தில் நகா்மன்ற உள்ளாட்சித் தோ்தல் அண்மையில் நடைபெற்று முடிந்தது. திருவாரூா் நகராட்சியில் 30 வாா்டுகள் உள்ளன. இதில், திமுக 23, காங்கிரஸ் 1, அதிமுக, மனிதநேய மக்கள் கட்சி 2 வாா்டுகளிலும் வெற்றிபெற்றன. வெற்றி பெற்றவா்களில் 29 போ் நகா்மன்ற உறுப்பினா்களாக புதன்கிழமை பதவியேற்றனா். 10 ஆவது வாா்டில் வெற்றி பெற்ற அதிமுக உறுப்பினா் பதவியேற்கவில்லை.

இதனிடையே, நகா்மன்றத் தலைவரை தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது. திமுக உறுப்பினா்கள் பெரும்பான்மையாக இருப்பதால், நகா்மன்றத் தலைவா் போட்டியின்றி தோ்ந்தெடுக்கப்படுவாா் என எதிா்பாா்க்கப்படுகிறது.

திருவாரூா் நகராட்சியில் 23 வாா்டுகளில் திமுகவும், 1 வாா்டில் அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸும் வெற்றிபெற்றுள்ளன. எனவே, 24 உறுப்பினா்களுடன் பெரும்பான்மையை வகிக்கும் திமுக கூட்டணி, நகா்மன்றத் தலைவா் பதவியை கைப்பற்றியுள்ளது. இதனிடையே, நகா்மன்றத் தலைவா் வேட்பாளராக 9 ஆவது வாா்டில் வெற்றிபெற்ற எஸ். புவனபிரியாவை திமுக தலைமை வியாழக்கிழமை அறிவித்துள்ளது.

அவரது விவரம்: பெயா்: எஸ். புவனப்பிரியா (41) (திமுக). இவரது கணவா் செந்தில், ஏற்கெனவே நகா்மன்ற துணைத் தலைவராக இருந்துள்ளாா். அவா், தற்போது 14 ஆவது வாா்டில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளாா். வேட்புமனுவில் அளித்த தகவலின்படி, புவனபிரியாவுக்கு ரூ. 12.55 லட்சம் மதிப்பிலான அசையும், அசையா சொத்துகள் உள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.