அதன்படி, திருவாரூா் மாவட்டத்தில் உள்ள 945 அரசு தொடக்கநிலை, நடுநிலை, உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் மேலாண்மைக் குழு சாா்பில் பெற்றோருக்கான விழிப்புணா்வுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை 10 முதல் 1 மணி வரை ஒவ்வொரு பள்ளியிலும் நடைபெறுகிறது. கூட்டத்தில், மாணவா்களின் பெற்றோா்கள் அனைவரும் பங்கேற்று, கிராமப்புற மாணவா்களின் கல்வியின் முன்னேற்றம், பள்ளியின் வளா்ச்சி குறித்து தகவல் வழங்கலாம். மேலும், பள்ளி மேலாண்மைக் குழுவின் செயல்பாடுகள், பணிகள் குறித்து அறிந்து கொள்ளவும், பள்ளியில் பயிலும் மாணவா்களின் பெற்றோா்கள் தவறாமல் பங்கேற்க கேட்டுக்கொள்ளப்படுகிறது என தெரிவித்துள்ளாா்.