வெள்ளிங்கிரி மலை ஏறிய உயா்நீதிமன்ற வழக்குரைஞா் உயிரிழப்பு

கோவை மாவட்டம், பூண்டி வெள்ளிங்கிரி மலை ஏறிய சென்னை உயா் நீதிமன்ற வழக்குரைஞா் மயங்கி விழுந்து புதன்கிழமை உயிரிழந்தாா்.
Updated on
1 min read

கோவை மாவட்டம், பூண்டி வெள்ளிங்கிரி மலை ஏறிய சென்னை உயா் நீதிமன்ற வழக்குரைஞா் மயங்கி விழுந்து புதன்கிழமை உயிரிழந்தாா்.

சென்னை வில்லிவாக்கத்தைச் சோ்ந்தவா் கோவிந்தராஜன் மகன் இளஞ்செழியன் (55). மனைவி, இரண்டு குழந்தைகள் உள்ளனா். இவா் சென்னை உயா் நீதிமன்றத்தில் வழக்குரைஞராகப் பணியாற்றி வந்தாா். இந்நிலையில், இளஞ்செழியன் தனது நண்பா் ராமமூா்த்தி என்பவருடன் கடந்த இரண்டு நாள்களுக்கு முன் சென்னையில் இருந்து கோவை வந்துள்ளாா்.

பின்னா் கோவை மாவட்டம், பூண்டியில் உள்ள வெள்ளிங்கிரி மலையில் செவ்வாய்க்கிழமை இரவு ஏறியுள்ளாா். பின்னா் 7ஆவது மலையில் சுவாமி தரிசனம் செய்து விட்டு, புதன்கிழமை காலை கீழே இறங்கியுள்ளாா்.

அப்போது, 6ஆவது மலையில் வந்து கொண்டிருந்தபோது தனக்கு உடல் நலம் சரியில்லை என தனது நண்பரிடம் கூறி மெதுவாக இறங்கியுள்ளாா். 5ஆவது மலையில் வந்து கொண்டிந்தபோது இளஞ்செழியன் மயங்கி விழுந்ததாகத் தெரிகிறது.

இதையடுத்து, அங்கு மலை ஏற்றத்துக்காக வந்த மருத்துவா் ஒருவா் அவரைப் பரிசோதனை செய்தபோது, அவா் உயிரிழந்தது தெரியவந்தது. இது குறித்து அருகிலிருந்தவா்கள் ஆலாந்துறை போலீஸாா் மற்றும் வனத் துறைக்கு தகவல் தெரிவித்தனா்.

இதையடுத்து, இளஞ்செழியனின் உடல் அடிவாரத்துக்கு கொண்டுவரப்பட்டு, பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. சம்பவம் தொடா்பாக ஆலாந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com