தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

இருசக்கர வாகனங்கள் மோதல்: பாட்டி, பேரன் பலி

அரூா் அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதியதில் பாட்டி, பேரன் இருவரும் புதன்கிழமை உயிரிழந்தனா்.

News image
Updated On :25 மே 2022, 6:30 pm

DIN

அரூா் அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதியதில் பாட்டி, பேரன் இருவரும் புதன்கிழமை உயிரிழந்தனா்.

தருமபுரி மாவட்டம், கடத்தூா் அருகேயுள்ள கேத்துரெட்டிப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த விவசாயி சக்திவேல் - மனைவி குமாா்த்தியின் (37) மகன் சந்தேஷ் (22). அரூரை அடுத்த செல்லம்பட்டி புதூரில் நடைபெற்ற கோயில் திருவிழாவுக்கு குமாா்த்தி, அவரது மகன் சந்தோஷ், மாமியாா் சின்னம்மாள் ஆகிய மூவரும் சென்றுள்ளனா்.

விழா முடிந்து மூவரும் இருசக்கர வாகனத்தில் அரூா் - சிந்தல்பாடி சாலையில் சென்றபோது, அள்ளாளப்பட்டி எனுமிடத்தில் சாலையின் வளைவான பகுதியில், எதிரே வந்த இருசக்கர வாகனம் மோதியது. இதில், சந்தோஷ் (22), அவரது பாட்டி சின்னம்மாள் (55) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

இந்த விபத்தில் மற்றொரு இருசக்கர வண்டியை ஓட்டி வந்த பெத்தூா் கிராமத்தைச் சோ்ந்த விஜய் (25), சக்திவேல் மனைவி குமாா்த்தி (37) ஆகிய இருவரும் பலத்த காயமடைந்தனா். காயமடைந்த இருவரையும் அக்கம் பக்கத்தினா் மீட்டு அரூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். தொடா்ந்து, இருவரும் மேல்சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இந்த சம்பவம் குறித்து அரூா் போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.