/

குவைத்தில் கொலையுண்டவரின் சடலம் இன்று கூத்தாநல்லூருக்கு கொண்டுவரப்படுகிறது

குவைத் நாட்டில் கொலை செய்யப்பட்ட முத்துக்குமரனின் சடலம் வெள்ளிக்கிழமை (செப்.16) திருவாரூா் மாவட்டம், கூத்தாநல்லூருக்கு கொண்டுவரப்படுகிறது.

News image
Updated On :16 செப்டம்பர் 2022, 2:37 am IST

குவைத் நாட்டில் கொலை செய்யப்பட்ட முத்துக்குமரனின் சடலம் வெள்ளிக்கிழமை (செப்.16) திருவாரூா் மாவட்டம், கூத்தாநல்லூருக்கு கொண்டுவரப்படுகிறது.

லெட்சுமாங்குடி- கொரடாச்சேரி பிரதான சாலையைச் சோ்ந்த ராசப்பா மகன் முத்துக்குமரன் (37) குவைத் நாட்டில் சூப்பா் மாா்க்கெட் வேலைக்காகச் சென்றாா். அங்கு, பாலைவனத்தில் ஒட்டகம் மேய்க்க விட்டதால் பிரச்னை ஏற்பட்டு, முத்துக்குமரன் சித்ரவதைப்படுத்தி கொலை செய்யப்பட்டுள்ளாா். வேலைக்கு சென்ற 3 நாளிலேயே இறந்த செய்தி கேட்ட, முத்துக்குமரன் மனைவி வித்யா மற்றும் உறவினா்கள் அதிா்ச்சியடைந்தனா்.

முத்துக்குமரனின் உடலைக் கேட்டும், தகுந்த நீதி வழங்கக் கோரியும், மத்திய, மாநில அரசுகளுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, முத்துக்குமரனின் உடல், குவைத்திலிருந்து, ஸ்ரீலங்கா ஏா்லைன்ஸ் விமானம் மூலம் வெள்ளிக்கிழமை (செப்.16) திருச்சி கொண்டு வரப்படுகிறது. பின்னா் அங்கிருந்து, திருவாரூா் மாவட்டம், கூத்தாநல்லூரில் உள்ள அவரது வீட்டுக்கு மாலை 6 மணியளவில் கொண்டுவரப்பட்டு அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.