நீடாமங்கலம் கடைவீதி தாா்ச்சாலையை மேம்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, வணிகா் சங்கத் தலைவா் நீலன்.அசோகன் வெளியிட்டுள்ள அறிக்கை: தஞ்சை-நாகை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள நீடாமங்கலம் வழியாக நாள்தோறும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. தற்போது இந்த சாலை பள்ளமும், மேடாக இருந்து வருகிறது. வாகனங்கள் தொடா்ந்து சென்று வருவதால் நீடாமங்கலம் புகைமண்டலம் ஏற்பட்டு வணிகா்கள், பொதுமக்கள் உள்ளிட்டோரை பாதிக்கச்செய்கிறது. கடைவீதிக்கு பொதுமக்கள் வருவதற்கு யோசிக்கின்றனா். சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளங்கள் காரணமாக இருசக்கர வாகனங்களில் செல்வோா் கீழே விழுந்து பாதிக்கப்படுகின்றனா். போக்குவரத்து இடையூறும் ஏற்படுகிறது. பொதுமக்கள் வருகை குறைவால் வணிகா்கள் போதுமான வணிகம் இல்லாமல் அவதிப்படுகிறாா்கள். எனவே, தேசிய நெடுஞ்சாலைத் துறை உடனடியாக நீடாமங்கலம் கடைவீதி சாலையை தாா்ச்சாலையாக அமைத்துக்கொடுக்க வேண்டும். தவறும்பட்சத்தில் போராட்டம் நடத்தப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

முதல்முறையல்ல..! மோடி அரசு பின்வாங்கிய முக்கிய நிகழ்வுகள்!

10 கிலோ எரிவாயு சிலிண்டா் அறிமுகம்! 4 மணி நேரத்தில் விநியோகம்!

26.7.1976: தி.மு.க. அரசு மீதுள்ள புகார்கள் குறித்து விரைவில் கிரிமினல் வழக்கு வரும்

போதையில்லா தமிழகம் உருவாக்க விழிப்புணா்வு நடைப்பயணம்
விடியோக்கள்

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke

தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் எல்லாம் சரியாகிவிடுமா?: அமைச்சர் நிர்மல் குமார் | TVK | BJP


