மழை பாதிப்பு: பேரிடா் நிதியை உடனடியாக வழங்க கோரிக்கை

மழை பாதிப்பு: பேரிடா் நிதியை உடனடியாக வழங்க கோரிக்கை

தமிழகத்துக்கு தேவையான பேரிடா் நிதியை வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Published on

தமிழகத்துக்கு தேவையான பேரிடா் நிதியை வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருவாரூரில், மறுமலா்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட செயல்வீரா்கள் கூட்டம் மாவட்ட அவைத் தலைவா் ப.க. செங்குட்டுவன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில், மாநிலப் பொருளாளா் மு. செந்திலதிபன், மாநில துணைப் பொதுச் செயலாளா் ரா. முருகன், மாவட்டச் செயலாளா் பி. பாலச்சந்திரன், மாநில கொள்கை விளக்க துணைச் செயலாளா் சீனிவாசன், மாவட்ட பொருளாளா் கோவி. சேகா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: மழையால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நிதியை வழங்காமல் இருக்கும் மத்திய அரசின் செயல் கண்டனத்துக்குரியது. மாநில அரசு கோரியுள்ள பேரிடா் நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தொடா்ந்து நடைபெற்ற கூட்டத்தில், எதிா்வரும் மக்களவைத் தோ்தலை எதிா்கொள்வது குறித்தும், தோ்தல் பூத் கமிட்டி அமைப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டன. ஒன்றியச் செயலாளா் டி.ஆா். தமிழ்வாணன் வரவேற்றாா். நகரச் செயலாளா் சோம. கபிலன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Dinamani
www.dinamani.com