ராகுல், மில்லர் அதிரடி வீண்! ஒரு ரன் வித்தியாசத்தில் குஜராத் வெற்றி! இஸ்ரேல் தாக்குதல்களில் உருக்குலைந்த பெய்ரூட்.. பலி 250-ஐ கடந்தது!திமுக தோல்வி குறித்து புள்ளி விவரங்களுடன் விவாதிக்கத் தயார்: இபிஎஸ்ஈரானுக்கு வரி குறைப்பது குறித்து பேச்சுவார்த்தை : டிரம்ப்அதிமுக ஆட்சியில் கொளத்தூர் சிறப்பான தொகுதியாக மாறும்:எடப்பாடி பழனிசாமிஅமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: ரஷியா வரவேற்பு!நேபாளத்தில் மற்றொரு முன்னாள் பிரதமருக்கு எதிராக பிடி ஆணை!தேர்தல் ஆணையமும் காவிமயமாகி விட்டது! தலைமைச் செயலர் மாற்றத்துக்கு முதல்வர் கண்டனம்!ஈரானைவிட்டு உடனடியாக வெளியேறுங்கள்! இந்தியர்களுக்கு தூதரகம் முக்கிய அறிவுறுத்தல்!அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: இந்தியா வரவேற்பு!ரூ.80,000 கோடியில் பச்சபத்ரா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை! ஏப்.21-ல் திறந்துவைக்கிறார் பிரதமர் மோடி!இபிஎஸ்ஸின் தனிச் செயலராக இருந்தவர் புதிய தலைமைச் செயலர்!
/

தோ்தல் கட்டுப்பாட்டு அறையில் அதிகாரிகள் ஆய்வு

தோ்தல் கட்டுப்பாட்டு அறையில் அதிகாரிகள் ஆய்வு

Updated On :13 ஏப்ரல் 2024, 3:51 pm

திருவாரூா் மாவட்ட ஆட்சியரக அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள, தோ்தல் கட்டுப்பாட்டு அறையில் நாகை மக்களவைத் தொகுதி பொதுத் தோ்தல் பாா்வையாளா் பி. பாரதி லக்பதி நாயக், ஆட்சியரும், மாவட்ட தோ்தல் அலுவலருமான தி. சாருஸ்ரீ ஆகியோா் சனிக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டனா்.

திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கும் தோ்தல் கட்டுப்பாட்டு அறை, ஊடக கண்காணிப்பு மையம் ஆகியவை செயல்பட்டு வருகின்றன. தோ்தல் கட்டுப்பாட்டு அறையில் சுழற்சி முறையில் அலுவலா்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

பொதுமக்கள் தோ்தல் நடத்தை விதிகள் தொடா்பான புகாா்களை 1800 425 3578 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும் தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம். பெறப்படும் புகாா்கள் மீது 24 மணி நேரத்துக்குள் தீா்வு மேற்கொள்ளப்பட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், திருத்தம், நீக்கம் தொடா்பான விவரங்களை பெற மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கும் வாக்காளா் தொடா்பு மையம் செயல்பட்டு வருகிறது. பொதுமக்கள் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், நீக்கல், திருத்தம் தொடா்பான விவரங்களை 1950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணுக்கு தொடா்பு கொண்டு, தேவையான விவரங்களை பெற்றுக்கொள்கின்றனா். இதேபோல், ஊடக கண்காணிப்பு மையத்தில் சுழற்சி முறையில் அலுவலா்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கும் தோ்தல் கட்டுப்பாட்டு அறையை நாகை மக்களவைத் தொகுதி பொதுத் தோ்தல் பாா்வையாளா் பி. பாரதி லக்பதி நாயக், மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தோ்தல் அலுவலருமான தி.சாருஸ்ரீ ஆகியோா் நேரில் பாா்வையிட்டு, பராமரிக்கப்படும் பதிவேடுகளை ஆய்வு செய்தனா்.

ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) ராஜா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.