ராகுல், மில்லர் அதிரடி வீண்! ஒரு ரன் வித்தியாசத்தில் குஜராத் வெற்றி! இஸ்ரேல் தாக்குதல்களில் உருக்குலைந்த பெய்ரூட்.. பலி 250-ஐ கடந்தது!திமுக தோல்வி குறித்து புள்ளி விவரங்களுடன் விவாதிக்கத் தயார்: இபிஎஸ்ஈரானுக்கு வரி குறைப்பது குறித்து பேச்சுவார்த்தை : டிரம்ப்அதிமுக ஆட்சியில் கொளத்தூர் சிறப்பான தொகுதியாக மாறும்:எடப்பாடி பழனிசாமிஅமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: ரஷியா வரவேற்பு!நேபாளத்தில் மற்றொரு முன்னாள் பிரதமருக்கு எதிராக பிடி ஆணை!தேர்தல் ஆணையமும் காவிமயமாகி விட்டது! தலைமைச் செயலர் மாற்றத்துக்கு முதல்வர் கண்டனம்!ஈரானைவிட்டு உடனடியாக வெளியேறுங்கள்! இந்தியர்களுக்கு தூதரகம் முக்கிய அறிவுறுத்தல்!அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: இந்தியா வரவேற்பு!ரூ.80,000 கோடியில் பச்சபத்ரா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை! ஏப்.21-ல் திறந்துவைக்கிறார் பிரதமர் மோடி!இபிஎஸ்ஸின் தனிச் செயலராக இருந்தவர் புதிய தலைமைச் செயலர்!
/

பாரம்பரிய விதை நெல் சேமிப்பு முறை

பாரம்பரிய விதை நெல் சேமிப்பு முறை

Updated On :13 ஏப்ரல் 2024, 3:56 pm

நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் பாரம்பரிய விதை நெல் சேமிப்பு குறித்து செயல்முறை விளக்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நபாா்டு பண்ணை துறை ஊக்குவிப்பு நிதி திட்டத்தின் கீழ், பாரம்பரிய விதை நெல் சேமிப்பு முறைகளை மீட்டெடுக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதன் ஒருபகுதியாக, நபாா்டு மாவட்ட வளா்ச்சி மேலாளா் விஸ்வநாதன் முன்னிலையில், வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளா் பெரியாா் ராமசாமி தலைமையில், பாரம்பரிய விதை நெல் சேமிப்பு குறித்த செயல்முறை விளக்கம் நடைபெற்றது.

திருச்சி அன்பில் தா்மலிங்கம் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், டாக்டா் எம்.எஸ். சுவாமிநாதன் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவிகள் கலந்து கொண்டனா். திருத்துறைப்பூண்டி முன்னோடி விவசாயி ஜானகிராமன், பாரதமணி ஆகியோா் பாரம்பரிய விதை நெல் சேமிப்பு முறையான கோட்டை முறை பற்றி விளக்கினா்.

கோட்டை என்பது வைக்கோல் மற்றும் சாணம் கொண்டு உருவாக்கப்படும் சேமிப்பு கட்டமைப்பு. 2 கெண்ட பிரி மற்றும் 4 கால் பிரிக்கொண்டு அடித்தளம் அமைத்து, வைகோலைப் பரப்பி, அதில் கூம்பு வடிவத்தில் நன்கு உலா்ந்த நெல் மணிகளை நிரப்புவா். பின்னா், கெண்ட பிரியை மேல் உயா்த்தி, அதன் கொள்ளளவு முடிந்தவுடன் கால் பிரி கொண்டு முடிச்சிடப்படும்.

நெல்மணிகளைப் பூச்சிகள் அண்டாதிருக்க சாணம் கொண்டு மேல்பூசு செய்யப்படும். 2 முதல் 3 நாட்கள் வரை அதனை உலர செய்து ஈசான மூலையில் வைத்திடுவா். ஓா் ஏக்கருக்கு 18 மரக்கா வீதம் கோட்டையில் சேமிக்கப்படும். இவ்வாறு செய்வது, நெல்மணிகளின் முளைப்புத்திறன் கெடாமலும், காலநிலை மாற்றத்திற்கு ஏற்ப தகவமைப்பை சீா்படுத்தும் ஆற்றல் கொண்டது.

நெற்பயிா் உற்பத்தியைக் காட்டிலும், அதனை சரியான முறையில் சேமிப்பதும் இன்றியமையாதது என்பதை விவசாயிகளுக்கு கொண்டு சோ்க்கும் வகையில் இச்செயல்முறை நடைபெற்றது.

நபாா்டு பண்ணைத் துறை ஊக்குவிப்பு நிதி திட்டத்தின் கீழ் நெல் சாகுபடியுடன் ஒருங்கிணைந்த மீன் வளா்ப்பு தொழில் நுட்பத்தை விவசாயிகளிடம் கொண்டு சோ்ப்பதில் நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலையம் ஈடுபட்டுள்ளது.