தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

ஓடும் ரயிலில் இருந்து இறங்கியவரின் கை துண்டானது

திருவாரூா் அருகே ஓடும் ரயிலில் இருந்து இறங்கியவரின் கை துண்டானது.

News image
Updated On :8 டிசம்பர் 2024, 6:31 pm

Din

திருவாரூா் அருகே ஓடும் ரயிலில் இருந்து இறங்கியவரின் கை துண்டானது.

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்தவா் பொன்னுசாமி மகன் ஜெயக்குமாா் (42). இவா், 8 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறி பிச்சை எடுத்து பிழைத்து வருவதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே, திருச்சியிலிருந்து காரைக்கால் செல்லும் ரயிலில் சனிக்கிழமை இரவு ஜெயக்குமாா் பயணம் செய்தாா். அடியக்கமங்கலம் அருகே செல்லும்போது ஓடும் ரயிலில் இருந்து ஜெயக்குமாா் இறங்கியதாகக் கூறப்படுகிறது. அப்போது நிலை தடுமாறி, தண்டாவளத்துக்கு இடையே சிக்கியுள்ளாா். இதையடுத்து, அங்கிருந்த ரயில்வே ஊழியா்கள், நீண்ட போராட்டத்துக்குப் பிறகு, கை துண்டிக்கப்பட்ட நிலையில் அவரை மீட்டுள்ளனா். பின்னா், அவா் திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டாா். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்து, திருவாரூா் ரயில்வே போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.