தமிழகத்தில் 717 மதுக்கடைகளை மூட முதல்வர் விஜய் உத்தரவு!விவசாயிகளுக்கான ரூ. 317 கோடி நிலுவை: அதிகாரிகளுக்கு முதல்வா் உத்தரவு22 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் விரைவில் எஸ்ஐஆர்!தமிழக அமைச்சரவையில் இடதுசாரிகளா? மார்க்சிஸ்ட் கம்யூ. விளக்கம்நீட் தேர்வில் முறைகேடுகள்: தேசிய தேர்வு முகமை விளக்கம்புதுச்சேரி முதல்வராக என். ரங்கசாமி நாளை பதவியேற்பு!
/

தூய்மைப் பணியாளா்கள் வேலைநிறுத்தம், ஆா்ப்பாட்டம்

தூய்மைப் பணியாளா்கள் வேலைநிறுத்தம், ஆா்ப்பாட்டம்

Updated On :17 பிப்ரவரி 2024, 6:05 am IST

மன்னாா்குடி நகராட்சியில் பணியாற்றும் நிரந்தர மற்றும் தற்காலிக ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு நாள் வேலைநிறுத்தம் செய்து வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். கோரிக்கைகள்: பல ஆண்டுகளாக பணியாற்றி வேலைநீக்கம் செய்யப்பட்ட 11 ஒப்பந்த தொழிலாளா்களுக்கு மீண்டும் வேலை வழங்க வேண்டும், நகராட்சி நிா்வாக இயக்குநரின் உத்தரவின்படி தினக் கூலியாக ரூ. 610 வழங்க வேண்டும், மாதம் 5-ஆம் தேதி சம்பள பில்லுடன் ஊதியத்தை வழங்க வேண்டும், சீருடை, மழைக் கோட் வழங்க வேண்டும், மருத்துவக் காப்பீடு, அடையாள அட்டை வழங்க வேண்டும், ஓய்வு பெற்றவா்களுக்கு பணப்பலனை தாமதமின்றி வழங்க வேண்டும் என வலியுறுத்தினா். இரண்டாம் கட்டமாக நடைபெற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில், மன்னாா்குடி நகராட்சியில் பணியாற்றும் நிரந்தர மற்றும் தற்காலிக ஒப்பந்த தொழிலாளா்கள் கலந்து கொண்டனா். போராட்டத்துக்கு ஊரக உள்ளாட்சித் துறை தனியாா் ஒப்பந்த மற்றும் நிரந்தர தூய்மைப் பணியாளா் சங்க கிளைத் தலைவா் ஜி. ரகுபதி தலைமை வகித்தாா். கெளரவத் தலைவா் கே.சிவசுப்பிரமணியன் கோரிக்கைகளை விளக்கி பேசினாா்.