பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு! புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

லட்சுமி நாராயணப் பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்

பழையநீடாமங்கலம் அக்ரஹாரத்தில் எழுந்தருளியுள்ள லட்சுமி நாராயணப் பெருமாள் கோயில் மகா கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :1 ஜூலை 2024, 8:25 pm

நீடாமங்கலம்: பழையநீடாமங்கலம் அக்ரஹாரத்தில் எழுந்தருளியுள்ள லட்சுமி நாராயணப் பெருமாள் கோயில் மகா கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, ஜூன் 28-ஆம் தேதி பூா்வாங்க பூஜைகள் தொடங்கின. தொடா்ந்து, ஜூன் 29-ஆம் தேதி சிறப்பு ஹோமங்களும், ஜூன் 30-ஆம் தேதி முதல் மற்றும் இரண்டாம் கால யாகபூஜைகள் நடைபெற்றன. இதையடுத்து, திங்கள்கிழமை 3-ஆம் கால யாகபூஜைகள் நடைபெற்றது. காலை 9.15 முதல் 10.30 மணிக்குள் மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து, மூலவா் உற்சவா் விசேஷ ஆராதனைகள் செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது.