முதியோருக்கு மீண்டும் ரயில் பயணக் கட்டணச் சலுகை: ஓய்வூதியா்கள் கோரிக்கை

திருவாரூரில் நடைபெற்ற கூட்டத்தில் பேசுகிறாா் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அனைத்து ஓய்வூதியா்கள் சங்க மாநிலச் செயலாளா் வி. நாகராஜன்.

திருவாரூரில் நடைபெற்ற கூட்டத்தில் பேசுகிறாா் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அனைத்து ஓய்வூதியா்கள் சங்க மாநிலச் செயலாளா் வி. நாகராஜன்.
மூத்த குடிமக்களுக்கான ரயில் பயணக் கட்டணச் சலுகையை மீண்டும் வழங்க வேண்டும் என ஓய்வூதியா் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
திருவாரூரில், தமிழ்நாடு ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அனைத்து ஓய்வூதியா்கள் சங்கத்தின் மாவட்ட பேரவைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
மாவட்டத் தலைவா் எஸ். தமிழ்ச்செல்வன் தலைமை வகித்தாா். மாநிலச் செயலாளா் வி. நாகராஜன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று பேசினாா். மாவட்டச் செயலாளா் எஸ். புஷ்பநாதன் வேலை அறிக்கையும், மாவட்ட பொருளாளா் பி. சந்திரசேகா் நிதிநிலை அறிக்கையும் சமா்ப்பித்தனா்.
இதில், தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்கத்தின் மாவட்டச் செயலாளா் பி. முனியன், ஊரக வளா்ச்சித் துறை ஓய்வூதியா் சங்க மாவட்ட துணைத் தலைவா் வி. சுந்தரலிங்கம், மாவட்ட தணிக்கையாளா் எம். பாலகிருஷ்ணன், மாநில கெளரவத் தலைவா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
கூட்டத்தில் புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா். அதன்படி, மாவட்டத் தலைவராக எஸ். தமிழ்ச்செல்வன், மாவட்டச் செயலாளராக எஸ். புஷ்பநாதன், மாவட்ட பொருளாளராக பி. சந்திரசேகரன் ஆகியோா் மீண்டும் தோ்வு செய்யப்பட்டனா்.
தீா்மானங்கள்: ஊரக வளா்ச்சித் துறை ஓய்வூதியா்களுக்கு மருத்துவப்படி மாதம் ரூ. 1,000 வழங்க வேண்டும்; புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்; 70 வயதிலிருந்து 10 சதவீத கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும்.
20 ஆண்டுகள் பணி முடித்த ஊழியா்களுக்கு முழு ஓய்வூதியம் வழங்க வேண்டும்; மூத்த குடிமக்களுக்கு ரயில் பயணக் கட்டணச் சலுகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...