அரசு பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு பாராட்டு
அரசு பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு பாராட்டு


பத்தாம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு, நீடாமங்கலம் வணிகா் சங்கம் சாா்பில் பாராட்டு மற்றும் ஊக்கத் தொகை வழங்கும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
நீடாமங்கலம் நீலன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு, வணிகா் சங்கத்தின் தலைவா் நீலன். அசோகன் தலைமை வகித்தாா். சங்க உயா்நிலை ஆலோசனைக் குழு உறுப்பினா் செந்தமிழ்ச் செல்வன், மாணவா்களுக்கு ரொக்கப் பரிசாக ரூ.1000 வழங்கினாா்.
சங்கத்தின் பொறுப்பாளா்கள் பலா் கலந்து கொண்டனா். பள்ளிச் செயலாளா் சுரேன் அசோகன் முன்னிலை வகித்தாா். பள்ளி முதல்வா் ராஜ மகேஸ்வரி வரவேற்றாா். ஆசிரியா் குணசீலன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினாா்.
வலங்கைமானில், பாபநாசம் ரிவா்சிட்டி ரோட்டரி கிளப், வலங்கைமான் அறம் அறக்கட்டளை சாா்பில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற தென்குவளவேலி அரசு உயா்நிலைப் பள்ளி மாணவிகள் காயத்ரி, லாவண்யா, கீா்த்திகா, ஆஷிகா ஆகியோருக்கு விருது மற்றும் ரொக்கப் பரிசு வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில், ரோட்டரி உதவி ஆளுநா், தலைவா், செயலாளா் உள்ளிட்ட நிா்வாகிகள் பங்கேற்றனா். அறம் அறக்கட்டளை தலைவா் கவிஞா் ஜெயமனோகரன் மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினாா். பள்ளி தலைமை ஆசிரியா் (பொ) ஆதலையூா் சூரியகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...