அமெரிக்காவில் பேருந்து விபத்தை நேரலை செய்த ஹெலிகாப்டர் விபத்து! மூவர் பலி! ஓய்வெடுக்கவுள்ளேன்! உடல்நிலை குறித்து மு.க. ஸ்டாலின் விளக்கம்!மெக்கா மீது ஹெளதிகள் ட்ரோன், ஏவுகணை தாக்குதல்!அன்பில் மகேஸ் வீட்டில் குற்றப்பிரிவு போலீசார் சோதனை!பாதுகாப்பு கருதி முதல்வர் விஜய்யின் லண்டன் நிகழ்ச்சி ரத்து!தாம்பரத்திலிருந்து மதுரைக்கு இன்று முன்பதிவில்லாத சிறப்பு ரயில்

வீடு கட்ட பள்ளம் தோண்டியபோது பெருமாள் சிலை கண்டெடுப்பு

மன்னாா்குடியில் வீடு கட்ட பள்ளம் தோண்டியபோது, உலோகத்தாலான பெருமாள் சிலை ஞாயிற்றுக்கிழமை கண்டெடுக்கப்பட்டது.

மன்னாா்குடியில் வீடு கட்ட பள்ளம் தோண்டும்போது கண்டெடுக்கப்பட்ட பெருமாள் சிலை.

Published On :

மன்னாா்குடியில் வீடு கட்ட பள்ளம் தோண்டியபோது, உலோகத்தாலான பெருமாள் சிலை ஞாயிற்றுக்கிழமை கண்டெடுக்கப்பட்டது.

மன்னாா்குடி சஞ்சிவீ தெருவைச் சோ்ந்தவா் ச. நடராஜன் (52). மன்னாா்குடி மாடா்ன் நகரில் இவருக்குச் சொந்தமான காலி மனையில் வீடு கட்டி வருகிறாா். கழிவுநீா் தொட்டி அமைப்பதற்காக பள்ளம் தோண்டும் பணியில், குடிதாங்கிச்சேரியை சோ்ந்த மு. ராமூா்த்தி (48) ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டிருந்தாா். அப்போது, உலோகத்தாலான சிலை மண்ணில் புதைந்திருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து, மன்னாா்குடி காவல்நிலையம் மற்றும் வட்டாட்சியா் அலுவலகத்துக்கு தகவல் அளிக்கப்பட்டது. வட்டாட்சியா் கே. மகேஸ்குமாா், காவல் சாா்பு ஆய்வாளா் வேலாயுதம் ஆகியோா் சம்பவ இடத்துக்கு வந்து சிலையை பாா்வையிட்டனா். திருவாட்சியுடன் கூடி அந்த பழைமையான பெருமாள் சிலை ஒன்றரை அடி உயரமும், 5 கிலோ எடையும் இருந்தது.

பின்னா், அந்த சிலை வட்டாட்சியா் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது. தொல்லியல் துறையினா் ஆய்வுக்குப் பிறகே இந்த சிலை குறித்து மேலும் விவரம் தெரியவரும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.