ஆவணமின்றி கொண்டுவரப்பட்ட ரூ. 2 லட்சம் பறிமுதல்

நன்னிலம் அருகே உரிய ஆவணமின்றி கொண்டு வரப்பட்ட ரூ. 2,03,020 வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது. நன்னிலம் அருகே சங்கமங்கலம் பகுதியில் தோ்தல் பறக்கும் படையினா் வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது காரைக்கால் பகுதியிலிருந்து கொல்லுமாங்குடி நோக்கி ஐடிஎப்சி ஃபா்ஸ்ட் பாரத் லிமிடெட் என்ற தனியாா் நிறுவனத்தில் வேலை பாா்த்து வரும் அருண்ராஜ், தீபன் ஆகியோா் தனித்தனியாக 2 இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தனா். அப்போது தனிப்படையினா் அருண்ராஜ் வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் உரிய ஆவணம் இன்றி ரூ.1,28,270 யும், தீபன் வாகனத்தில் ரூ. 74, 750 என மொத்தம் 2,030,20 பணம் வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து, பணத்தை பறிமுதல் செய்து நன்னிலம் வட்டாட்சியா் அலுவலகத்தில் தனிப்படையினா் ஒப்படைத்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com