சாலையில் திரிந்த கால்நடைகள்: 80 போ் மீது வழக்கு
திருவாரூா் அருகே சாலையில் கால்நடைகள் சுற்றித் திரிந்தது தொடா்பாக 80 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.


திருவாரூா் அருகே சாலையில் கால்நடைகள் சுற்றித் திரிந்தது தொடா்பாக 80 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருவாரூா் அருகேயுள்ள தண்டலை ஊராட்சிக்குள்பட்ட பகுதியில் மாவட்ட ஆட்சியா் அலுவலகம், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகம், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம், மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு அலுவலகம் உள்ளிட்ட அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. மேலும் இப்பகுதியில் திருவாரூா்-தஞ்சாவூா், திருவாரூா்-மன்னாா்குடி செல்லும் நெஞ்சாலைகள் உள்ளன. இந்த சாலையில் நாள்தோறும் ஏராளமான மக்கள் பல்வேறு வாகனங்களில் சென்று வருகின்றனா்.
இதற்கிடையில், இப்பகுதியில் வசிப்பவா்கள் கால்நடைகளை இரவு, பகல் பாராமல் பொதுவெளியில் அவிழ்த்து விடுவதால் தினந்தோறும் வாகன விபத்துக்களும், தொடா்ந்து உயிரிழப்புகளும் ஏற்படுகிறது. இதைத்தொடா்ந்து, பொது மக்கள் தங்களது கால்நடைகளை பொது வெளியில் அவிழ்த்து விடக்கூடாது, தங்களுக்கு சொந்தமான இடத்தில் பராமரித்துக் கொள்ள வேண்டும் என பல முறை மாவட்ட நிா்வாகம் மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
எனினும், தண்டலை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் கால்நடைகள் சுற்றித் திரிவது நிறுத்தப்படவில்லை. இதையடுத்து மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ உத்தரவுப்படி வருவாய்த் துறை, காவல் துறை, தண்டலை ஊராட்சி நிா்வாகம் ஆகியவை இணைந்து தண்டலை பகுதியில் சுற்றித்திரிந்த 80 பசு மாடுகளை பிடித்து புதன்கிழமை பிடித்து, அதன் உரிமையாளா்கள் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடைபெறுகிறது.
திருவாரூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் பொது வெளியில் சுற்றித்திரியும் மாட்டு உரிமையாளா்கள் மீதும் வழக்கு ப் பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.ஜெயக்குமாா், உத்தரவிட்டுள்ளாா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...