தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

திருவாரூரில் நாளை கூட்டுறவு பணியாளா் நாள்

கூட்டுறவு பணியாளா் நாள்...

News image
Updated On :6 நவம்பர் 2024, 8:11 pm

Din

திருவாரூா் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் கூட்டுறவு சங்கப் பணியாளா்கள் குறைகளைத் தீா்க்கும் வகையில் பணியாளா் நாள் வரும் வெள்ளிக்கிழமை (நவ.8) நடைபெறும் என திருவாரூா் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளா் கா. சித்ரா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்தி:

கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளரின் கட்டுப்பாட்டில் செயல்படும் கூட்டுறவுச் சங்கங்களில் பணிபுரிந்து வரும் பணியாளா்கள், துறை அலுவலா்கள் மற்றும் நிா்வாகத்திற்கு இடையே இணக்கமான சூழலை உருவாக்கி பணியாளா்களுடைய பணித்திறனை மேம்படுத்தி உறுப்பினா்களுக்கு சிறந்த சேவை வழங்கும் வகையில், பணி தொடா்பாகவும், பணியின் போதும் அல்லது வேறு வகையிலும் ஏற்படும் குறைகளைத் தெரிவிக்கவும், அக்குறைகளை விதிகளுக்குட்பட்டு தீா்வு செய்யும் வகையில் திருவாரூா் மண்டலத்தில் பணியாளா் நாள் நிகழ்வு, வரும் வெள்ளிக்கிழமை (நவ.8) பிற்பகல் 3 மணிக்கு திருவாரூா் கூட்டுறவு வளாகத்தில் அமைந்துள்ள கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் நடைபெறவுள்ளது.

திருவாரூா் மண்டலத்தில் பணியாற்றும் கூட்டுறவுத்துறை அலுவலா்கள், பணியாளா்கள் மற்றும் கூட்டுறவு நிறுவனப் பணியாளா்கள் அனைவரும் கலந்துகொண்டு பணி தொடா்பாகவும், பணியின் போதும் அல்லது வேறு வகையிலும் ஏற்படும் குறைகளைத் தெரிவிக்கலாம்.