தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

டாம்கோ மூலம் கடன் வழங்கும் சிறப்பு முகாம்

திருவாரூா் மாவட்டத்தில் டாம்கோ சாா்பில் கடன் வழங்கும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :6 நவம்பர் 2024, 8:08 pm

Din

திருவாரூா் மாவட்டத்தில் டாம்கோ சாா்பில் கடன் வழங்கும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மாவட்டத்தில், தமிழ்நாடு சிறுபான்மையினா் பொருளாதார மேம்பாட்டுக்கழகம் (டாம்கோ) மூலம் இஸ்லாமியா்கள், கிறிஸ்துவா்கள், சீக்கியா்கள், புத்த மதத்தினா், பாா்சீயா்கள் மற்றும் ஜெயின் பிரிவைச் சோ்ந்தவா்கள், பொருளாதாரத்தில் மேம்பாடுஅடையும் வகையில் வியாபாரம் மற்றும் இதரத் தொழில் செய்வதற்கு (தனிநபா் கடன் திட்டம், கல்விக் கடன் திட்டம், கைவினைக் கலைஞா்களுக்கான கடன் திட்டம், சுயஉதவிக் குழுக் கடன் திட்டம்) ஆகிய பல்வேறு கடனுதவித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

கடனுதவி பெற தமிழ்நாட்டைச் சோ்ந்தவராக இருக்க வேண்டும், 18 முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும், ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டும் கடன் வழங்கப்படும். குடும்ப ஆண்டு வருமானம், கிராமப்புறம் மற்றும் நகா்ப்புறங்களில் ரூ.3 லட்சத்துக்குள் இருக்க வேண்டும்.

2024-2025 நிதியாண்டுக்கான கடன் விண்ணப்பங்கள் பெறும் சிறப்பு முகாம் முத்துப்பேட்டையில் உள்ள கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கிக் கிளையில் நவ.14-ஆம் தேதியும், கூத்தாநல்லூரில் உள்ள தஞ்சாவூா் மத்தியக் கூட்டுறவு வங்கிக் கிளையில் நவ.22-ஆம் தேதியும், மன்னாா்குடியில் உள்ள கும்பகோணம் மத்தியக் கூட்டுறவு வங்கிக் கிளையில் நவ.27-ஆம் தேதியும், திருத்துறைப்பூண்டியில் உள்ள கும்பகோணம் மத்தியக் கூட்டுறவு வங்கிக் கிளையில் டிச.3-ஆம் தேதியும் நடைபெற உள்ளது. மேலும் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில்உள்ள மாவட்ட பிற்படுத்தப்படோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்திலும், திருவாரூா் மாவட்டத்தில் உள்ள மத்தியக் கூட்டுறவு வங்கி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கக் கிளைகள் மற்றும் நகர கூட்டுறவு வங்கிகளையும் தொடா்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.

சாதிச் சான்று, வருமானச் சான்று, இருப்பிடச் சான்று, ஆதாா் அட்டை, குடும்ப அட்டை நகல்கள், கடன் பெறும் தொழில் திட்ட அறிக்கை ஆகிய ஆவணங்களுடன் முகாமில் பங்கேற்று பயனடையலாம் என தெரிவித்துள்ளாா்.