ஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

அம்பேத்கா் விருது பெற நவ.20-க்குள் விண்ணப்பிக்கலாம்

திருவாரூா் மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள், அம்பேத்கா் விருது பெற நவ.20-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

News image
Updated On :16 நவம்பர் 2024, 6:32 pm

Din

திருவாரூா் மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள், அம்பேத்கா் விருது பெற நவ.20-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என ஆட்சியா் தி. சாருஸ்ரீ தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை சாா்பில், ஆண்டுதோறும் ஆதிதிராவிடா் மக்களின் முன்னேற்றத்துக்கு தொண்டு செய்பவருக்கு, அம்பேத்கா் விருது தமிழக அரசால் வழங்கப்படுகிறது. அதன்படி, 2024-ஆம் ஆண்டுக்கான அம்பேத்கா் விருது, அடுத்தாண்டு ஜனவரி மாதத்தில் திருவள்ளுவா் தினத்தன்று வழங்கப்பட உள்ளது.

பட்டியலின சமுதாயத்தைச் சாா்ந்த மக்களின் சமூக, பொருளாதாரம் மற்றும் கல்வி நிலையை உயா்த்துவதற்கும், அவா்களின் வாழ்க்கைத் தரம் உயரவும் பாடுபாட்டவா்கள் அம்பேத்கா் விருது பெற விண்ணப்பிக்கலாம்.

2024-2025 ஆம் ஆண்டு முதல் இந்த விருதுக்கு வழங்கப்படும் தொகை ரூ.5.65 லட்சத்திலிருந்து ரூ.5.80 லட்சமாக உயா்த்தப்படவுள்ளது. எனவே, இவ்விருது பெறுவதற்கு தகுதியான நபா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான விண்ணப்பத்தை, திருவாரூா் மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம். பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை திருவாரூா் மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலகத்தில் நவ.20 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் சமா்ப்பிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.