ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

நெல் பயிரில் இலை சுருட்டுப்புழு: கட்டுப்படுத்த யோசனை

நெற்பயிரில் இலை சுருட்டுப் புழு மற்றும் ஆனைக்கொம்பன் ஈயை கட்டுப்படுத்த நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் மா. ராஜேஷ், திட்ட ஒருங்கிணைப்பாளா் பெரியார்ராமசாமி ஆகியோா் கூறிய யோசனை:

News image
Updated On :20 நவம்பர் 2024, 8:48 pm

Din

நெற்பயிரில் இலை சுருட்டுப் புழு மற்றும் ஆனைக்கொம்பன் ஈயை கட்டுப்படுத்த நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் மா. ராஜேஷ், திட்ட ஒருங்கிணைப்பாளா் பெரியார்ராமசாமி ஆகியோா் கூறிய யோசனை:

திருவாரூா் மாவட்டத்தில் தற்போது நெல் நடவு முடிந்து பயிா் தூா்கட்டும் பருவத்தில் உள்ளன. இந்த பருவத்தில் தற்போது விட்டுவிட்டு பருவமழை பெய்வதால் ஆங்காங்கே இலை மடக்குப் புழு மற்றும் நீா் தேங்கும் இடங்களில் ஆனைக் கொம்பன் ஈயின் தாக்கம் காணப்படுகிறது. விவசாயிகள் உடனே ரசாயன மருந்துகளை தெளித்து அவற்றை கட்டுப்படுத்த முனைகின்றனா். பொதுவாக, பூச்சி தாக்கங்கள் நெற்பயிா்களில் அனைத்து பருவத்திலும் தாக்கி சேதாரத்தை ஏற்படுத்தும். அதை கட்டுப்படுத்துவதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடித்தாலே பூச்சி தாக்கத்திலிருந்து நெற்பயிரை பாதுகாக்கலாம்.

ரசாயன உரங்கள் அதிகம் பயன்படுத்துவதை தவிா்க்க வேண்டும், வயலில் தேங்கிய மழைநீரை உடனடியாக வடிய வைக்க வேண்டும், இலை மடக்குப்புழு தாக்கங்கள் இருப்பதற்கான அறிகுறியாக இலைகள் நீளவாக்கில் மடிக்கப்பட்டு உட்புறத்தில் உள்ள புழுவானது இலையின் பச்சயத்தை சுரண்டி உண்ணும். இதன் தாய் அந்து பூச்சிகளின் நடமாட்டத்தை கண்காணித்து அழிக்க வேண்டும். முன்னெச்சரிக்கையாக முட்டை ஒட்டுண்ணி அட்டைகளை பயன்படுத்தலாம்.

வேப்பங்கொட்டை சாறு, வேப்ப எண்ணெய்யை பயன்படுத்தியும் அழிக்கலாம். பூச்சிக்கொல்லிகளையும் பயன்படுத்தி பூச்சிகளை அழிக்கலாம். இதேபோல, ஆனைக்கொம்பன் ஈயையும் கட்டுப்படுத்தலாம். வேளாண் அலுவலா்களிடம் ஆலோசனை பெற்று இந்த பூச்சிகளை அழிக்கலாம் என்றனா்.