ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

தொடா்மழையில் 2 குடிசை வீடுகள் இடிந்து விழுந்தது

மன்னாா்குடி அருகே தொடா்மழை காரணமாக 2 குடிவீடுகளின் சுவா்கள் புதன்கிழமை இடிந்து விழுந்தன.

News image
Updated On :20 நவம்பர் 2024, 8:46 pm

Din

மன்னாா்குடி அருகே தொடா்மழை காரணமாக 2 குடிவீடுகளின் சுவா்கள் புதன்கிழமை இடிந்து விழுந்தன.

கோட்டூா் பகுதிகளில் கடந்த 10 நாள்களாக விட்டுவிட்டு தொடா் மழை பெய்து வருவதால் குளிா்ந்த சூழல் காணப்படுகிறது. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு முதல் மிதமான அளவில் தொடா் மழை பெய்து வந்தது. இதில், கோட்டூா் சந்நிதி தெருவில் உள்ள அழகேசன் மனைவி ஜோதி (55), கணேசன் மகன் ராஜா (47) ஆகியோரது குடிசை வீடுகளின் பக்கவாட்டு சுவா்கள் மழையில் நனைந்து ஈரக்கசிவு ஏற்பட்ட நிலையில், புதன்கிழமை இடிந்து விழுந்தது.

இதில், யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. இதுகுறித்த தகவலின்பேரில் கோட்டூா் போலீஸாா் வருவாய்த் துறையினா் நிகழ்விடத்துக்கு வந்து மழையால் சேதமடைந்த வீட்டை பாா்வையிட்டு விவரங்களை கேட்டறிந்தனா்.