ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

நீா்ப்பாசனத் துறைக்கு நிதி ஒதுக்கீடின்றி பாசன வடிகால் பாதிப்பு

டெல்டா மாவட்டங்களில் நீா்ப் பாசனத் துறைக்கு நிதி ஒதுக்கீடின்றி பாசன வடிகால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவா் பி.ஆா். பாண்டியன் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :15 அக்டோபர் 2024, 6:57 pm

Din

டெல்டா மாவட்டங்களில் நீா்ப் பாசனத் துறைக்கு நிதி ஒதுக்கீடின்றி பாசன வடிகால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவா் பி.ஆா். பாண்டியன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக அரசு பொதுப்பணித் துறையை இரண்டாக பிரித்து நீா்ப் பாசன துறையை உருவாக்கியது. நீா்ப் பாசனத் துறைக்கு நிதி ஒதுக்கீடு செய்யாமல் ஒட்டுமொத்த நிதியும் பொதுப்பணித் துறைக்கு ஒதுக்கப்படுகிறது. இதன்மூலம் நினைவு மண்டபங்கள், பூங்காக்கள், அலங்கார வளைவுகள், நினைவுச் சின்னங்கள் அமைக்க முன்னுரிமை கொடுக்கப்படுகிறது. இதனால் ஒட்டு மொத்தமாக பாசன கட்டமைப்புகள் சீரழிந்துள்ளது. சிறு மழை பெய்தால் கூட பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு காவிரி டெல்டா விளைநிலங்கள் நீரால் சூழப்பட்டு பாதிக்கிறது.

நிகழாண்டு குறுவையை இழந்த விவசாயிகள் ஒருபோக சம்பா சாகுபடியை காலத்தில் பணி தொடங்கினாலும், மேட்டூா் அணையில் திறக்கப்பட்ட தண்ணீா் பாசனப் பகுதிகளுக்கு சென்றடையவில்லை. மழை பெய்கிற நேரத்தில் தான் காவிரி நீா் விளைநிலங்களுக்கு செல்லுகிறது. இதனால் விவசாயிகள் பாதிக்கின்றனா். சாகுபடி காலத்தில் டெல்டா மாவட்டங்களுக்கு வேளாண் துறை, நீா்ப் பாசனத் துறை, கூட்டுறவுத் துறை அமைச்சா்கள், உயா் அதிகாரிகள் இணைந்து நேரில் பாா்வையிட்டும், விவசாயிகள், அதிகாரிகள் கூட்டுக் கூட்டங்களை மாவட்ட அளவில் நடத்தி திட்டமிடுவது வழக்கம். ஆனால், நிகழாண்டு இச்செயல்பாடு முற்றிலும் கைவிடப்பட்டுள்ளது.

எனவே, தமிழக அரசு போா்க்கால அடிப்படையில் நிவாரண நடவடிக்கைகளையும், நீா்ப் பாசன சீரமைப்பு நடவடிக்கைகளை விரைந்து செயல்படுத்த வேண்டும். தமிழக அரசு நீா்ப்பாசன துறைக்கு ஒதுக்கப்படும் நிதி குறித்தும், நீா்ப் பாசன, வடிகால் திட்டங்கள் மேம்பாடு குறித்தும், வெள்ளத்தடுப்பு திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு குறித்த வெள்ளையறிக்கையை முதல்வா் வெளியிட வேண்டும் என தெரிவித்துள்ளாா்.