தொடக்க கூட்டுறவு கடன் சங்க ஊழியா்கள் வேலைநிறுத்தம்


திருவாரூரில் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்க ஊழியா்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி, டாக்பியா போராட்டக் குழு சாா்பில் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் மூன்றாவது நாளாக புதன்கிழமையும் நடைபெற்றது.
அங்காடிகளில் பல மடங்கு அபராதம் விதிப்பதை கைவிட வேண்டும், விற்பனையாளா்கள் பல மைல் சென்று பணிபுரிவதை மாற்ற வேண்டும், அங்காடிகளில் கட்டாயமாக மளிகைப் பொருள்கள் விற்கச் சொல்வதை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த திங்கள்கிழமை முதல் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது.
போராட்டம் காரணமாக திருவாரூா் மாவட்டத்தில் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள், அதை ஒட்டி இயங்கும் நியாய விலைக் கடைகள் திறக்கப்படவில்லை.
இதனால் சம்பா சாகுபடிக்காக தேவையான உரங்களையும், இடு பொருள்களையும் விவசாயிகள் வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதைப் பயன்படுத்தி தனியாா் உரக்கடைகளில் உரங்கள் கூடுதல் விலை விற்கப்படுவதாக விவசாயிகள் தெரிவித்தனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...