

நீடாமங்கலம்: வலங்கைமான் மகாமாரியம்மன் கோயில் தெப்பத் திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
வலங்கைமானில் பிரசித்தி பெற்ற மகாமாரியம்மன் கோயில் உள்ளது இக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது.
பங்குனி திருவிழாவின் எட்டாம் நாள் பாடைக் காவடி திருவிழா நடைபெறுவது வழக்கம். இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பாடைக்காவடி எடுத்து தங்களது நேர்த்திக் கடனை செலுத்துவார்கள்.
அதேபோல் சிறப்பு வாய்ந்த இக் கோவிலில் ஆவணி ஞாயிற்றுக்கிழமை திருவிழாவும் அதி விமரிசையாக நடைபெறுவது வழக்கம். ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் மகா மாரியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது .
ஆவணி கடை ஞாயிறன்று கோயிலில் தெப்பத் திருவிழா நடைபெற்றது. இதனை முன்னிட்டு பக்தர்கள் பால்குடம் எடுத்தனர்.
மகா மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்
மகா மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டது.வெள்ளி வாகனத்தில் அம்மன் எழுந்தருளி வீதியுலா காட்சி தந்தார்.
இரவு மகா மாரியம்மன் தெப்பத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். வலங்கைமான் சந்திரசேகரன், ஆலங்குடி பாலமுருகன் குழுவினரின் நாதஸ்வர இன்னிசை கச்சேரியும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை கோயில் தக்கார் மும்மூர்த்தி, செயல்அலுவலர் ரமேஷ் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.