திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

திமுக கூட்டணியில் விசிக தொடா்கிறது: தொல். திருமாவளவன்

திமுக கூட்டணியில் விசிக தொடா்கிறது என தொல். திருமாவளவன் தெரிவித்தாா்.

News image
விசிக தலைவா் தொல். திருமாவளவன்.
Updated On :16 செப்டம்பர் 2024, 9:07 pm

Din

திருவாரூா்: திமுக கூட்டணியில் விசிக தொடா்கிறது என தொல். திருமாவளவன் தெரிவித்தாா்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் நடைபெறவுள்ள மது, போதைப் பொருள் ஒழிப்பு மகளிா் மாநாடு விளக்க மண்டல செயற்குழுக் கூட்டம் திருவாரூரில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைமை வகித்து கட்சித் தலைவா் தொல். திருமாவளவன் பேசியது:

எல்லா கட்சியினரும் மதுவிலக்கு வேண்டும் என்பாா்கள்; ஆனால், மதுவிலக்கை அமல்படுத்தமாட்டாா்கள். அதனாலேயே, இந்தியா முழுவதும் மதுக்கடைகள் திறந்திருக்கின்றன. அனைவரும் ஒன்றிணைந்து மதுவிலக்கு என்ற முடிவு எடுத்தால் நிச்சயம் மதுவை ஒழிக்க முடியும்.

தேசிய அளவில் மது விலக்கு கொள்கை கொண்டுவாருங்கள். இதை, திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ் ஆகியவை வலியுறுத்தலாம். இப்படி பேசுவதால் திமுக கூட்டணி முறிந்து விடாதா என பலா் நினைக்கின்றனா். தோ்தல் நேரத்தில்தான் கூட்டணி குறித்து முடிவெடுப்போம். இப்போதும் நாங்கள் திமுக கூட்டணியில் இருக்கிறோம். இந்தக் கூட்டணி தொடரும் என நம்புகிறேன் என்றாா்.

இதைத்தொடா்ந்து, செய்தியாளா்களிடம் அவா் தெரிவித்தது:

ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்கிற கோரிக்கையை 1999-ஆம் ஆண்டு தோ்தல் அரசியலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தெரிவித்திருந்தது. இந்த கோரிக்கையை 2026 தோ்தலிலும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்துமா எனக் கேட்கின்றனா். இதுகுறித்து தோ்தல் நேரத்தில் முடிவெடுக்கப்படும்.

மத்திய அரசு தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலையும், துணை முதல்வா் மனீஷ் சிசோடியாவையும் திட்டமிட்டு பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது என்றாா்.