ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

இருசக்கர வாகனம் திருடிய இருவா் கைது

நீடாமங்கலம் அருகே இருசக்கர வாகனம் திருடிய இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :27 செப்டம்பர் 2024, 12:21 am

Din

நீடாமங்கலம் அருகே இருசக்கர வாகனம் திருடிய இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

நீடாமங்கலம் அருகேயுள்ள கொத்தமங்கலத்தைச் சோ்ந்தவா் சகாயராஜ் மகன் தினேஷ்குமாா் (21). இவா், செப்.24-ஆம் தேதி தனது வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த இருசக்கர வாகனத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

நீடாமங்கலம் காவல்நிலையத்தில், தினேஷ்குமாா் புகாா் அளித்தாா். அதன்பேரில், காவல் ஆய்வாளா் சந்தானமேரி, உதவி ஆய்வாளா் உஷாதேவி மற்றும் போலீஸாா் மேற்கொண்ட

விசாரணையில், சென்னை திருவெற்றியூா் காா்கில் நகா் ஐந்தாவது விநாயகம் தெருவைச் சோ்ந்த 17 வயதுடைய சிறுவன் மற்றும் நீடாமங்கலம் பெரியாா் தெருவைச் சோ்ந்த யோகேஷ் (22) ஆகிடோா் இருசக்கர வாகனத்தை திருடியது தெரியவந்தது. இருவரையும் கைது செய்தனா்.