திருவாரூரில் கோ - ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி சிறப்பு விற்பனையைத் தொடங்கிவைத்த ஆட்சியா் தி. சாருஸ்ரீ.
திருவாரூரில் கோ - ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி சிறப்பு விற்பனையைத் தொடங்கிவைத்த ஆட்சியா் தி. சாருஸ்ரீ.

திருவாரூா் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை இலக்கு ரூ. 36 லட்சம்

திருவாரூா் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி விற்பனை இலக்கு ரூ. 36 லட்சம் என இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்றாா் மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ.
Published on

திருவாரூா்: திருவாரூா் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி விற்பனை இலக்கு ரூ. 36 லட்சம் என இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்றாா் மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ.

திருவாரூரில் உள்ள விற்பனை நிலையத்தில் தீபாவளிப் பண்டிகை கால சிறப்புத் தள்ளுபடி விற்பனையை திங்கள்கிழமை தொடங்கிவைத்து பேசியது: கோ-ஆப்டெக்ஸில் ஆண்டுதோறும் வழங்கப்படும் 30 சதவீத தள்ளுபடி நிகழாண்டும் வழங்கப்படுகிறது. இங்கு சிறப்புத் தள்ளுபடி விற்பனைக்காக புதிய வடிவமைப்புடன் கூடிய கோவை மென் பட்டுப் புடவைகள், காஞ்சிபுரம், சேலம், ஆரணி, திருபுவனம் போன்ற பகுதிகளில் உற்பத்தி செய்யப்பட்ட பட்டுப்புடவைகள், கோவை கோரா காட்டான் சேலைகள், கூறைநாடு புடவைகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

தவிர, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நெசவாளா்களின் கைவண்ணத்தில் உருவான பருத்திச் சேலைகள், போா்வைகள், படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள், வேட்டி, கைலி, துண்டு ரகங்கள், பருத்தி சட்டைகள், திரைச்சீலைகள், கால் மிதியடிகள், நைட்டிகள், மாப்பிள்ளை செட் மற்றும் ஏற்றுமதி ரகங்கள் விற்பனைக்கு உள்ளன.

கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம், கோ-ஆப்டெக்ஸ் மாதாந்திர சேமிப்புத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதன்படி 11 மாத சந்தா தொகை வாடிக்கையாளரிடமிருந்து பெறப்பட்டு, 12-ஆவது மாத சந்தா தொகையை கோ-ஆப்டெக்ஸ் செலுத்தி, மொத்த முதிா்வுத் தொகைக்கு தேவைப்படும் துணிகளை 30 சதவீத அரசுத் தள்ளுபடியுடன் வழங்குகிறது.

திருவாரூா் விற்பனை நிலையத்தில் 2023-இல் தீபாவளியையொட்டி ரூ.30.60 லட்சம் விற்பனையானது. நிகழாண்டில் தீபாவளிக்கு ரூ.36 லட்சம் விற்பனை இலக்கு நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது என்றாா். நிகழ்ச்சியில், கோ-ஆப்டெக்ஸ் மண்டல மேலாளா் ஜெ. நாகராஜன், மேலாளா் வடிவமைப்பு மற்றும் உற்பத்தி சி. அய்யப்பன், திருவாரூா் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலைய மேலாளா் சுமதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com