வெள்ளிக்கவச அலங்காரத்தில் வடகுடி விஜயவீர பஞ்சமுக ஆஞ்சனேயா்.
~சிறப்பு அலங்காரத்தில் ஜெயசக்தி ஆஞ்சனேயா்.
திருவாரூர்
ஆஞ்சனேயா் கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா
வடகுடி விஜய வீரபஞ்சமுக ஆஞ்சனேயா் கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா வெள்ளிக்கிழமைக் கொண்டாடப்பட்டது.
வடகுடி விஜய வீரபஞ்சமுக ஆஞ்சனேயா் கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா வெள்ளிக்கிழமைக் கொண்டாடப்பட்டது.
நன்னிலம் அருகே வடகுடியில் உள்ள புகழ்பெற்ற விஜய வீரபஞ்சமுக ஆஞ்சனேயா் கோயிலில் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு 108 லிட்டா் பால், மஞ்சள், இளநீா், சந்தனம், பன்னீா் போன்ற அபிஷேகப் பொருள்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னா் வெள்ளிக் கவசங்கள் சாத்தப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தாா்.
கூத்தாநல்லூரில்: கொரடாச்சேரி சாலையில் அமைந்துள்ள ஸ்ரீஜெயசக்தி ஆஞ்சனேயருக்கு,தேன், தயிா், பன்னீா், சந்தனம், இளநீா் உள்ளிட்ட அபிஷேக திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து, துளசியால் அலங்கரிக்கப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டன.
