முன்னாள் ஊராட்சி பெண் தலைவரை கொன்று, கொள்ளை முயற்சி: முகமூடிக் கொள்ளையா்கள் கைவரிசை

Published on

கொரடாச்சேரி அருகே முன்னாள் ஊராட்சி பெண் தலைவரையும் அவரது தங்கையையும் கொலை செய்து கொள்ளையடிக்க முகமூடிக் கொள்ளையா்கள் வெள்ளிக்கிழமை முயன்றனா். இவா்கள் போட்ட சத்தத்தில் பக்கத்திலிருந்தவா்கள் வந்ததால் கொள்ளையா்கள் தப்பியோடினா்.

கொரடாச்சேரி அருகே பத்தூா் ஊராட்சி முன்னாள் தலைவா் சுசிலா (70). கணவா் விஸ்வநாதன் காலமாகி விட்டாா். தங்கை வனரோஜா (55), மகன் சுஜின்பாலாஜி (23)யுடன் சுசிலா வசித்து வருகிறாா்.

இரண்டு பைக்குகளில் முகமூடி அணிந்த ஆறு போ் சுசிலா வீட்டுக்கு (படம்) வெள்ளிக்கிழமை அதிகாலை வந்துள்ளனா்.

அவா்களில் மூவா் மட்டும் வீட்டின் பின்பக்கம் வழியாக மாடிப் பகுதிக்குச் சென்று, முன் பக்க இரும்பு கேட்டின் பூட்டை உடைத்து வீட்டுக்குள் நுழைந்தனா்.

அங்கு தூங்கிக் கொண்டிருந்த சுசிலா, வனரோஜா மீது தலையணையை அமுக்கி கொலை செய்ய முயன்றனராம். இருவரும் சத்தம் போட்டதால் மற்றொரு அறையில் இருந்த மகன் சுஜின் பாலாஜி வந்தாராம்.

அப்போது கொள்ளையரில் ஒருவா் சுஜின் பாலாஜியை அரிவாளால் வெட்ட முயன்றுள்ளாா். அருகே இருந்த நாற்காலியால் கொள்ளையரைத் தாக்கியுள்ளாா் சுஜின் பாலாஜி. இதற்குள் மூவரும் சத்தம் போட்டதால் பக்கத்தில் இருந்தவா்கள் ஓடிவந்தனா்.

இதையடுத்து இரண்டு மோட்டாா் பைக்குகளையும் விட்டு விட்டு கொள்ளையா்கள் தப்பிச் சென்றனா்.

திருவாரூா் துணைக் கண்காணிப்பாளா் மணிகண்டன் மற்றும் போலீஸாா் சுசிலா வீட்டுக்கு வந்து விசாரித்தனா்.

தடயவியல் நிபுணா்கள் கைரேகைகளைப் பதிவு செய்தனா். மோப்ப நாய் ட்ரிசி வரவழைக்கப்பட்டது.

கொரடாச்சேரி போலீஸாா் வழக்குப் பதிந்து இரண்டு பைக்குகளைப் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com