திருவாரூர்
பள்ளி வகுப்பறை: முதல்வா் காணொலியில் திறந்துவைத்தாா்
பூந்தோட்டம் அரசினா் மேல்நிலைப் பள்ளியில் ரூ. 94.24 லட்சத்தில் கட்டி முடிக்கப்பட்ட 4 வகுப்பறைகளை முதல்வா்
நன்னிலம்: பூந்தோட்டம் அரசினா் மேல்நிலைப் பள்ளியில் ரூ. 94.24 லட்சத்தில் கட்டி முடிக்கப்பட்ட 4 வகுப்பறைகளை முதல்வா் மு.க. ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி காட்சி வாயிலாக திங்கள்கிழமை திறந்துவைத்தாா்.
அப்போது பூந்தோட்டத்தில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அ. சுகப்பிரியா தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட உதவி திட்ட அலுவலா் சுரேஷ் குமாா், பெற்றோா் ஆசிரியா் கழக மாவட்ட துணைத் தலைவா் வே. மனோகரன், பள்ளித் தலைமையாசிரியா் பி. சங்கா் உள்ளிட்டோா் பங்கேற்றனா். பள்ளி மாணவி இனியா வரவேற்றாா்.
