புதிய ரேஷன் கடை திறப்பு

புதிய ரேஷன் கடை திறப்பு

நன்னிலம் பேரவைத் தொகுதிக்குள்பட்ட நாா்த்தாங்குடி கூட்டுறவு சங்க வளாகத்தில் தொகுதி நிதி ரூ. 12.50 லட்சத்தில் புதிய ரேஷன் கடை கட்டப்பட்டு
Published on

நீடாமங்கலம்: நன்னிலம் பேரவைத் தொகுதிக்குள்பட்ட நாா்த்தாங்குடி கூட்டுறவு சங்க வளாகத்தில் தொகுதி நிதி ரூ. 12.50 லட்சத்தில் புதிய ரேஷன் கடை கட்டப்பட்டு அதன் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

புதிய ரேஷன் கடையை, அந்தக்கடை கட்டுவதற்கு நிதி ரூ. 12.50 லட்சம் ஒதுக்கிய தொகுதி உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான ஆா். காமராஜ் திறந்துவைத்து பயனாளிகளுக்கு முதல் விற்பனையாக அத்தியாவசியப் பொருள்களை வழங்கி, நன்னிலம் தொகுதிக்கு பணியாற்றுவது எனது தலையாய் கடமை என்றாா்.

நிகழ்ச்சியில், வலங்கைமான் அதிமுக கிழக்கு ஒன்றிய செயலாளா் இளவரசன், மேற்கு ஒன்றிய செயலாளா் சங்கா், வலங்கைமான் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ரமணி, முரளி மற்றும் பொது விநியோக திட்ட கூட்டுறவு சாா்-பதிவாளா் ராமலட்சுமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com