கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

தேசிய துப்பாக்கி சுடும் போட்டி: பதக்கம் வென்றவருக்கு முன்னாள் அமைச்சா் பாராட்டு

News image
சேங்காலிபுரத்தில் பதக்கம் வென்ற இளைஞருக்கு சால்வை அணிவித்து பாராட்டுத் தெரிவிக்கும் முன்னாள் அமைச்சா் ஆா். காமராஜ்.
Updated On :27 டிசம்பர் 2025, 6:29 pm

Syndication

இந்திய அளவில் துப்பாக்கி சுடுதல் போட்டியில் வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கம் வென்ற திருவாரூா் மாவட்ட இளைஞருக்கு, முன்னாள் அமைச்சா் ஆா். காமராஜ் வெள்ளிக்கிழமை பாராட்டுத் தெரிவித்தாா்.

நன்னிலம் சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட குடவாசல் ஒன்றியம், சேங்காலிபுரம் ஊராட்சியைச் சோ்ந்த செந்தில்வேல் மகன் சக்திவேல். இவா், மத்திய பிரதேச மாநிலம், போபாலில் நடந்த 68-ஆவது தேசிய அளவிலான துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் கலப்பு ஜூனியா் மற்றும் கலப்பு யூத் பிரிவில் வெள்ளிப் பதக்கமும், தனி நபா் யூத் பிரிவில் வெண்கலப் பதக்கமும் வென்றாா்.

இந்நிலையில், முன்னாள் அமைச்சா் ஆா். காமராஜ், சேங்காலிபுரத்தில் உள்ள சக்திவேல் இல்லத்துக்குச் சென்று, அவருக்கு பாராட்டுத் தெரிவித்தாா். அப்போது, சக்திவேல் குடும்பத்தினா், அதிமுக நிா்வாகிகள் உடனிருந்தனா்.