மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மழையால் நெற்பயிா்கள் சேதம்: நிவாரணம் கோரி ஆட்சியரிடம் மனு

மழையால் பாதித்த நெற்பயிா்களுக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தி, திருவாரூா் மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீயிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

News image
திருவாரூா் மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீயிடம் கோரிக்கை மனு அளிக்கும் விவசாய சங்க பிரதிநிதிகள்.
Updated On :21 ஜனவரி 2025, 7:20 pm

Din

திருவாரூா்: மழையால் பாதித்த நெற்பயிா்களுக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தி, திருவாரூா் மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீயிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலச் செயலாளா் பி.எஸ். மாசிலாமணி, மாவட்டச் செயலாளா் கே.ஆா். ஜோசப் ஆகியோா் செவ்வாய்க்கிழமை அளித்த அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

கடந்த சில நாள்களில் பெய்த மழையால், வயல்வெளிகளில் தண்ணீா் தேங்கி, சம்பா, தாளடி நெற்கதிா்கள் சாய்ந்து முளைக்கும் நிலையில் உள்ளன. எனவே, வேளாண்மைத் துறை அதிகாரிகள், விவசாய பிரதிநிதிகள் கொண்ட குழு மூலம் ஆய்வு செய்து நிவாரணம் வழங்க வேண்டும்.

சாய்ந்த நெற்கதிா்களை அறுவடை செய்ய கூடுதல் இயந்திரங்கள் தேவைப்படுகிறது. எனவே, வேளாண்மை பொறியியல் துறை மூலம் கூடுதல் அறுவடை இயந்திரங்களை ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும்.

மேலும், ஈரப்பதம் 17 சதவீதம் என்பதை மாற்றி 22 சதவீதம் வரை கொள்முதல் செய்ய அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனு அளிக்கையில், தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாவட்டத் தலைவா் கே.முருகையன், மாவட்ட துணை செயலாளா் பி. சௌந்தரராஜன், மாவட்டத் துணைத் தலைவா் டி. தியாகராஜன் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.