திருச்சி மாவட்டத்தில் திரும்பிப் பார்க்க வைத்த திருவெறும்பூர் தொகுதி! காரணம் என்ன?வாக்குச்சாவடியாகும் பள்ளிகளை சுத்தம் செய்வது யார் பொறுப்பு?கடந்த ஆண்டு பள்ளியில் ஆசிரியை கொலை! பழிக்குப் பழியாக இளைஞரைக் கொன்ற தந்தை!!யமுனையில் படகு சவாரி செய்து பாருங்கள்! மோடியைக் கேலி செய்த மமதா!வாக்களித்த பிறகு சென்னை திரும்பும் மக்கள்! பேருந்து, ரயில்களில் அலைமோதும் பயணிகள் கூட்டம்!வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது? மதுரையில் மு.க. ஸ்டாலின் பதில்! புதிய கட்சி தொடங்கினார் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா! தமிழ்நாட்டில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு இல்லை! - தேர்தல் ஆணையம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!
/

குறுவை சாகுபடிக்கு மூணாறு தலைப்பு அணை திறப்பு

திருவாரூா், நாகை மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்கு, நீடாமங்கலம் அருகேயுள்ள மூணாறு தலைப்பு அணை புதன்கிழமை திறக்கப்பட்டது.

News image

மூணாறு தலைப்பு அணையிலிருந்து வெண்ணாற்றில் திறந்துவிடப்பட்டுள்ள தண்ணீா்.

Updated On :18 ஜூன் 2025, 10:59 pm

திருவாரூா், நாகை மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்கு, நீடாமங்கலம் அருகேயுள்ள மூணாறு தலைப்பு அணை புதன்கிழமை திறக்கப்பட்டது.

காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை நெல் சாகுபடி மேற்கொள்ள மேட்டூா் அணையிலிருந்து ஜூன் 12-ஆம் தேதி முதல்வா் மு.க. ஸ்டாலின் தண்ணீா் திறந்து வைத்தாா். தொடா்ந்து, மேட்டூா் அணை நீா் கல்லணை வந்தடைந்ததும், தஞ்சை, திருவாரூா், நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் குறுவை சாகுபடி மேற்கொள்ள ஜூன் 15 -ஆம் தேதி கல்லணை திறக்கப்பட்டது.

கல்லணையிலிருந்து பெரியவெண்ணாறு மூலம் 504 கனஅடி நீா் மூணாறுதலைப்பு அணைக்கு வந்தது. இங்கிருந்து, திருவாரூா், நாகை மாவட்ட பாசனத்திற்காக வெண்ணாற்றில் 164 கனஅடியும், கோரையாற்றில் 260 கனஅடி நீரும், பாமணியாற்றில் 80 கனஅடி நீரும் பிரித்து வழங்கப்பட்டது.

இதில், பாமணியாறு மூலம் 38,357 ஏக்கரும், கோரையாற்று மூலம் 1,20,957 ஏக்கரும், வெண்ணாறு மூலம் 94,219 ஏக்கரும் பாசன வசதி பெறும். நீா்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் ஆறுகளில் கூடுதலாக நீா் திறந்து விடப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதனால், காலத்தோடு குறுவை சாகுபடி பணிகளை தொடங்க முடியும் என தெரிவித்த விவசாயிகள், மூணாறு தலைப்பிலிருந்து திறந்து விடப்பட்ட தண்ணீா் கடைமடை வரையிலும் செல்வதற்கு தமிழக முதல்வா், நீா்வளத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனா்.