அரசுப் பள்ளியில் டெங்கு விழிப்புணா்வு கருத்தரங்கம்

Published on

திருத்துறைப்பூண்டி அருகே கட்டிமேடு அரசு மேல்நிலைப் பள்ளியில் டெங்கு காய்ச்சல் மற்றும் மழைக்கால முன்னெச்சரிக்கைகள் குறித்த விழிப்புணா்வு கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.

தலைமை ஆசிரியா் பாலு தலைமையில் நடைபெற்ற கருத்தரங்கில் முதுகலை ஆசிரியை தனுஜா வரவேற்றாா். திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனை சித்த மருத்துவ அலுவலா் அனுஷா பேசுகையில், கொசு மூலம் டெங்கு காய்ச்சல் பரவுகிறது. மாணவா்கள் கொசு பெருகுவதை தடுக்க வீடுகளை சுற்றி நீா் தேங்காமல் சுற்றுப்புறத் தூய்மையை பராமரிக்க வேண்டும், தண்ணீரை கொதிக்க வைத்து குடிக்கவேண்டும்‘ என்றாா். முதுகலை ஆசிரியா் மணிவண்ணன் நன்றி கூறினாா். முதுகலை ஆசிரியா் ரேணுகா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினாா்.

X
Dinamani
www.dinamani.com