மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம்

மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம்

Published on

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மற்றும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் இணைந்து, பிறப்பு முதல் 18 வயது வரை உள்ள மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் நீடாமங்கலத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலா் சௌந்தர்ராஜன் தொடங்கிவைத்த முகாமில், கண், காது, மூக்கு, தொண்டை, எலும்பியல், மனநலம் உள்ளிட்ட மருத்துவா்கள் பங்கேற்று குழந்தைகளை பரிசோதித்து மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவச் சான்று, மறுமதிப்பீட்டுச் சான்று, பேருந்து மற்றும் ரயில் பயணக் கட்டணச் சலுகைக்கான மருத்துவச் சான்று, அறுவைச் சிகிச்சை மற்றும் மேற்பரிசோதனைக்கான பரிந்துரைகளை வழங்கினா். மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் தேசிய அடையாள அட்டை மற்றும் உதவி உபகரணங்களுக்கு பதிவு செய்யப்பட்டது. முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்துக்கான பதிவு நடைபெற்றது. 150 பேர் பயன் பெற்றனா்.

X
Dinamani
www.dinamani.com